கர்நாடக முதல்வரை பதவி விலக கூறிய ஹுப்பிளி-தர்வாட் காவல்துறை அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடக முதல்வராக HD குமாரசாமி பதவியேற்ற பின்னர் 18 நாட்களில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வார் என அறிவிக்கப்பட்டது. பதவியேற்கு ஒருமாதம் முடிவடையவிருக்கும் நிலையில் இதுவரை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யவில்லை என கூறி ஷிகார்பூர் தொகுதியை சேர்ந்த பாரதீய ஜனதா கட்சியினர் முதல்வர் பதவி விலக வேண்டும் என பதிவிட்டுள்ளனர். 



இந்த பேஸ்புக் பதிவினை பகிர்ந்துள்ள ஹுப்பிளி-தர்வாட் காவல்துறை ஆய்வாளர் MN நாகரான் அவர்கள் கர்நாட்டகா காவல்துறை இடைநீக்கம் செய்துள்ளது.


நாடுமுழுவதும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய கர்நாட்டக தேர்தல்கள் ஓய்ந்த பின்னர் எந்த கட்சி ஆட்சியை அமைப்பது என போட்டி நிகழ்ந்து வந்தது. இதனையடுத்து எந்த கட்சி ஆட்சி அமைப்பது என்பதினை தீர்மாணிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்னதாக முதல்வராக இருந்த எடியூரப்பா பதவி விலகியதை அடுத்து HD குமாரசாமி முதல்வராக பதவியேற்றார்.


இவர் பதவியேற்ற பின்னர் 18 நாட்களில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வார் என அறிவித்தார். முன்னதாக முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா தனது முதல் கையொழுத்தாக விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்ய ஆணையத்தில் கையொழுத்திட்டத்து குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் இதுவரையிலும் விவசாயிகளின் கடன் தள்ளுபடி குறித்து விவாதிக்காத கர்நாடாக முதல்வர் பதவி விலக வேண்டும் என ஷிகார்பூர் தொகுதியை சேர்ந்த பாரதீய ஜனதா கட்சியினர் முகப்புத்தகத்தில் பதிவிட்டனர். இந்த பதிவினை ஹுப்பிளி-தர்வாட் காவல்துறை ஆய்வாளர் MN நாகரான் அவர்கள் தனது முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளார். இந்த நடவடிக்கையினால் இவரை காவல்துறை நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது!