கொரோனாவுடனான போரில் நாம் நமது நாட்டில் மேற்கொண்ட எச்சரிக்கை நடவடிக்கைகள் உலக அளவில் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளன. இதற்கு காரணம் இந்தியர்களின் ஒற்றுமை மற்றும் அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து நடக்கவேண்டும் என்ற மக்களின் உறுதிப்பாடு. நம் நாட்டில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துக்கான மனித சோதனைகள் தொடங்கியுள்ளன. விரைவில் சீனா விநியோகித்த வைரசுக்கு எதிரான சரியான ஆயுதம் இந்தியாவிடம் இருக்கும் என்ற நம்பிக்கை உச்சியில் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக மக்களின் காலனாகிவிட்ட கொரோனா வைரஸை (Corona Virus) அழிப்பதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலகம் முழுதும் பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. நம் நாட்டு மக்களின் பார்வை மட்டுமல்ல, உலகத்தின் பார்வையும், மனிதர்கள் மீது இந்தியா நடத்தும் தடுப்பு மருந்து சோதனையின் மீதுள்ளது


கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா உலகத்திற்கு நம்பிக்கை அளித்து வருகிறது. கொரோனாவின் ஆரம்ப கட்டத்தில், கோவிட் -19 வைரஸை தனிமைப்படுத்துவதில் வெற்றி பெற்ற முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது இந்த நம்பிக்கைக்கான மிகப்பெரிய காரணமாகும். அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் தாய்லாந்து மீதமுள்ள நான்கு நாடுகளாகும்.


ALSO READ: கொரோனா தடுப்பூசி குறித்து 'நல்ல செய்தி'! AIIMS இல் இன்று கொரோனா தடுப்பூசி சோதனை


கொரோனா தடுப்பு மருந்தைப் (Corona Vaccine) பொறுத்தவரை, இந்தியா இறுதி கட்டத்தில் உள்ளதா? இந்த பணிகள் முழுமையடைய இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்? இந்த கேள்விக்கு பதில்களைப் பார்க்கும் முன், Covaxin-ன் ஹ்யூமன் ட்ரையலால் என்ன நடக்கும் என்பதை முதலில் காணலாம்?


  • தடுப்பு மருந்தின் திறன் பற்றி தெரியவரும்

  • தடுப்பு மருந்து மனிதர்கள் மீது எவ்வாறு செயலாற்றுகிறது என்பது புரியும்.

  • ஏதேனும் பக்கவிளைவுகள் உள்ளதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளலாம். 

  • தடுப்பு மருந்து கொரோனா ஆன்டிபாடிக்களை எவ்வளவு வேகமாக உருவாக்குகிறது என்பதும் தெரியவரும்.


மனித சோதனைகளில் மொத்தம் மூன்று கட்டங்கள் உள்ளன. இதில்


  • முதல் கட்டத்தில் - 375 தன்னார்வலர்கள் பங்கு கொள்வார்கள்

  • இரண்டாம் கட்டத்தில் - 700 தன்னார்வலர்கள் மீது சோதனை நடக்கும். 

  • மூன்றாம் கட்டத்தில் - பெரிய குழுவில் பரிசோதனை நடத்தப்படும்.


மூன்றாவது கட்டம் சோதனையின் இறுதி கட்டமாகும். மனித சோதனைகளின் முதல் கட்டத்தில், பாதுகாப்பு மீது கவனம் செலுத்தப்படுகிறது. முதல் கட்டத்தில் முற்றிலும் ஆரோக்கியமாக இருக்கும் வாலண்டியர்கள் மீது சோதனை நடக்கும். இதில், சிறுநீரகம், கல்லீரல் போன்ற இவர்களின் முக்கிய உறுப்புகளும் பரிசோதிக்கப்படும். மற்ற சில பரிசோதனைகளின் முடிவுகளும் சாதகமாக வந்தவுடன் அவர்களுக்கு தடுப்பு மருந்துக்கான டோஸ் வழங்கப்படும்.


இவை எல்லாம் வெற்றிகரமாக நடந்தால், கொரோனாவிற்கு எதிரான ஒரு வலுவான ஆயுதம் விரைவில் இந்தியாவின் கையில் இருக்கும். தடுப்பு மருந்தின் முதல் கட்ட மனித பரிசோதனைக்கு, மக்கள் பதிவு செய்துகொண்ட ஆர்வத்தைப் பார்த்தால், நாட்டிற்கான சேவையைப் பொறுத்த வரை, ஒவ்வொரு இந்தியரும் ஒரு ராணுவ வீரருக்கு சமமான உறுதியைப் பெற்றுள்ளனர் என்பது தெளிவாகிறது.


ALSO READ: No Worry....இனி வெறும் 20 நிமிடங்களில் கொரோனா சோதனை முடிவு