கிட்னியைக் கொடு என மனைவியை டார்ச்சர் செய்த கணவன்! சிறை கம்பிக்குள் முடக்கம்
மனைவியின் சிறுநீரகத்தை விற்க பிடிவாதம் பிடித்தார் கணவர்! காரணம் தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்
கிட்னியை கொடு, விற்க வேண்டும் என்ற கணவரின் கடுமையான வற்புறுத்தலால் மனமுடைந்த மனைவி போலீசில் புகார் அளித்தார். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணத்தேவை எப்போதும் இருந்துக் கொண்டு தான் இருக்கும். அதற்காக, பலரும் பலவிதங்களில் முயற்சி செய்வார்கள். ஆனால், தான் வாங்கிய கடனை அடைக்க மனைவியின் சிறுநீரகத்தை விற்க முயற்சித்த கணவர் இப்போது மாமியார் வீட்டில் களி தின்கிறார்.
மனைவியின் சிறுநீரகத்தை விற்பதில் பிடிவாதமாக இருந்த கணவர், அதை வெறும் வாய் வார்த்தைகளில் மட்டும் கேட்கவில்லை. சிறுநீரகத்தை கொடுக்க மறுத்த மனைவியையும், குழந்தைகளையும் கடுமையாக தாக்கியுள்ளார் இந்த கொடுமைக்கார மனிதர்.
கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்த நபர் தனது கடனை அடைக்க மனைவியிடம் சிறுநீரகத்தை தானமாக (Kidney Donation) கொடுக்க கேட்டுள்ளார். அதற்கு முதலில் மனைவியும் ஒப்புக் கொண்டார். பிறகு தனது சிறுநீரகத்தை தானமாக வழங்க மனைவி மறுத்துள்ளார்.
ஆனால் அதற்கு கோபப்பட்டு, தொடர்ந்து வற்புறுத்திய கணவன், பிறகு குழந்தைகளையும், மனைவியையும் போட்டு மிருகத்தனமாக அடித்துள்ளார்.
ALSO READ | கிட்னி பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமா?
ஒரு கட்டத்தில் விரக்தியடைந்த மனைவி போலீசில் புகார் கொடுத்தார். அதையடுத்து கணவர் சஜன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சஜனுக்கு 4 லட்சம் ரூபாய் வரை கடன் இருந்தது. மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சிறுநீரகத்தை கொடுத்தால், ஈடாக அவருக்கு 9 லட்சம் கிடைக்கும், எனவே மனைவியின் சிறுநீரகத்தை விற்று கடனை அடைத்துவிட்டு, எஞ்சிய பணத்தை கொண்டு நிம்மதியாக வாழலாம் என்று சஜன் திட்டமிட்டார்.
கேரளாவில் உறுப்பு நன்கொடையாளர்களைத் தேடும் முகவர்கள் அதிகம். சிறுநீரகத்தை கொடுப்பதாக ஒப்புக் கொண்ட பிறகு, நன்கொடையாளர் பல சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அவசரமாகத் தேவைப்படுபவர்களுக்கு சிறுநீரகங்கள் விற்கப்படுகின்றன என்பதை உணர்த்தும் நிதர்சன சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
ALSO READ | இது தமிழ்நாடு பாம்புகளின் உல்லாச மழை நடனம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR