ஹைதராபாத்தில் 139 பேர் தன்னை இதுவரையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக 25 வயது இளம்பெண் 42 பக்க FIR-யை பதிவு செய்துள்ளார்.!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த சில ஆண்டுகளில் 139 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு பெண் குற்றம் சாட்டியுள்ளார். புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.


கடந்த 25 ஆண்டுகளில் தன்னை 139 பேர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி உள்ளதாக 25 வயது பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உள்ள புஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இப்பெண், திருமணமான ஒரு வருடத்திற்குள் விவாகரத்து பெற்றவர். இவர் அளித்துள்ள புகாரில், விவாகரத்து பெற்றுள்ள தனது கணவரின் குடும்பத்தில் உள்ள சில உறுப்பினர்கள் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.


ALSO READ | ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு கோவிட் -19 சோதனை: மத்திய சுகாதார அமைச்சகம்!


இந்த புகாரை தொடர்ந்து IPC பிரிவுகளின் கீழ் SC/ST அட்டூழியங்களை தடுக்கக்கூடிய சட்டத்தின் கீழ் தொடர்புடைய விதிகளின் கீழ் கடந்த வியாழக்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 42 பக்கங்களுக்கு FIR போடப்பட்டுள்ளது. அந்தப் பெண் மருத்துவ பரிசோதனைக்கும் தற்போது அனுப்பப்பட்டுள்ளார். இப்பெண் அளித்துள்ள புகாரை தொடர்ந்து நாங்கள் வழக்குப்பதிவு செய்துள்ளோம். மேலும் குற்றவாளிகளையும் விசாரித்து வருகிறோம் என்று புஞ்சகுட்டா காவல் நிலைய போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளனர்.