ஹூண்டாய் விவகாரம்: தென் கொரிய தூதரிடம் வலுவான கண்டனத்தை பதிவு செய்த இந்தியா!
ஹூண்டாய் பாகிஸ்தான் நிறுவனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், காஷ்மீரின் விடுதலைக்காகப் பிரார்த்தனை செய்கிறோம். காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூர்கிறோம் என்று பதிவிடப்பட்டிருந்தது.
ஒவ்வொரு ஆண்டும் பிரிவினைவாதத்திற்கு ஆதரவாகக் காஷ்மீரில் பிப்ரவரி 5ஆம் தேதி காஷ்மீர் ஒற்றுமை தினம் கடைப்பிடிக்கப்படும் நிலையில், காஷ்மீர் பிரிவினவாதிகளை ஆதரித்து பாகிஸ்தானைச் சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் டீலர் பதிவிட்ட ட்வீட், பெரும் சர்ச்சையை கிளப்பியது.
ஹூண்டாய் பாகிஸ்தான் டீலரின் ட்விட்டர் பக்கத்தில், காஷ்மீரின் விடுதலைக்காகப் பிரார்த்தனை செய்கிறோம். காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூர்கிறோம் என்று பதிவிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து இந்தியளவில் #BoycottHyundai என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டானது. இந்திய அளவில் ஹூண்டாய் தயாரிப்புகளுக்கு எதிரான குரல் வலுத்த நிலையில், ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா ஒரு விளக்கத்தை அளித்து, ஹூண்டாய் பாகிஸ்தான் டிவிட்டர் பக்கத்தில் வெளியான கருத்தினை வன்மையாகக் கண்டிக்கிறோம்; இந்திய தேசியவாத கொள்கையை மதிக்கிறோம்; இந்தியாவின் இந்திய மக்களின் வளர்ச்சியில் உறுதுணையாக இருப்போம் அறிக்கையை என தனது அதிகாரபூர்வ சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டது.
மேலும் படிக்க | காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு கருத்து- விளக்கம் அளித்த Hyundai
இந்நிலையில், இந்தியா செவ்வாயன்று இந்தியாவுக்கான தென் கொரிய தூதர் சாங் ஜே-போக்கை வரவழைத்து ஹூண்டாய் பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய சமூக ஊடகப் பதிவுகளுக்கு, கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது.
வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, இது குறித்து கூறுகையில், இந்த விவகாரம் இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாடு தொடர்பான விஷயம் என்பதால், அதில் "சமரசம் என்ற பேச்சுகே இடம் இல்லை" என்று தென் கொரிய தூதரிடம் எடுத்துரைக்கப்பட்டதாக தெரிவித்தார்.
முன்னதாக, சியோலில் உள்ள இந்திய தூதர், ஹூண்டாய் தலைமையகத்தைத் தொடர்பு கொண்டு, சர்ச்சைக்குரிய ட்வீட் குறித்து விளக்கம் கேட்டதாக பாக்சி கூறினார். சியோலில் உள்ள இந்திய தூதரகமும் தென் கொரிய அரசிடம் தனது வலுவான கண்டனத்தை பதிவு செய்தது. தெரிவித்தது.
வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தென் கொரியாவின் தூதரை, அழைத்து பேசியாதாக கூறிய அரிந்தம் பாக்சி, தென் கொரிய வெளியுறவு அமைச்சர் சுங் ஈயு-யோங், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் தொலைபேசி உரையாடலின் போது இந்த பிரச்சினைக்கு வருத்தம் தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் படிக்க | ஹூண்டாய், மாருதியின் மார்க்கெட்டை காலி பண்ண வரும் Tiago..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR