இந்திய மக்களுக்கு நான் தலை வணங்குகிறேன்: பிரதமர் மோடி
கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி புழக்கத்தில் இருந்த 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார்.
கறுப்பு பணம், கள்ள நோட்டு ஆகியவற்றை ஒழிப்பது என்ற நோக்கத்துடன், டிஜிட்டல் பணபரிவர்த்தனையை அதிகரிக்கும் வகையிலும், இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தால் கறுப்புப்பணம் தடுப்பு, பயங்கரவாதிகளுக்கு நிதி தடை, அதிகரித்த டிஜிட்டல் பரிவர்த்தனை, வரி கட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, கடன்களுக்கான வட்டி வீதம் குறைப்பு உள்ளிட்ட பல பயன்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் இந்நடவடிக்கை வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கையாக பார்க்கப்பட்டது. இது அரசியல் தளத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது.
இந்த நடவடிக்கை எடுத்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், ‛‛ ஊழல் மற்றும் கறுப்பு பணத்தை ஒழிக்க அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைளை உறுதியாக ஆதரித்து வரும் இந்திய மக்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.'' என குறிப்பிட்டுள்ளார்.