காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி படியை நெருக்கியுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி தோல்வி முகத்தில் உள்ளது ‘பேட்ஸ்மேன் சதம் அடித்து அணி தோற்றது போல் உள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 340-க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து ஆட்சியமைக்கும் நிலையில் உள்ளது. வடமாநிலங்களில் ஒட்டுமொத்த தொகுதிகளையும் சுருட்டிய பாஜக, தென்மாநிலங்களில் கர்நாடகாவைத் தவிர மற்ற மாநிலங்களில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தவில்லை.


எனினும் காங்கிரஸ் கட்சி வடமாநிலங்களில் படுதோல்வியடைந்துள்ளது. அதேவேளையில் கேரளாவில் 15 தொகுதிகளுக்கு மேல் முன்னிலைப் பெற்றுள்ளது. 


கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் தலைவர் சசி தரூர் சுமார் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும் தருவாயில் உள்ளார்.



தான் வெற்றி பெற்றாலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்., "என்னுடைய முன்னிலை 50 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் உள்ளது. பேட்ஸ்மேன் சதம் அடித்த போதிலும், அவனுடைய அணி தோல்வி அடைந்தால் எப்படி இருக்குமோ? அதே உணர்வுதான் உள்ளது. இந்த கசப்பான உணர்வில் இருந்து வெளியேற சற்று காலம் தேவைப்படும்" என பதிவிட்டுள்ளார்.