மகாராஷ்டிரா ஆர்பாட்டம் எதிரொலியாக, மும்பையில் ஜிக்னேஷ் மேவானி கலந்துகொள்ளவிருந்த மாநாடுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் விஷேம்புபூக் காவல்நிலையத்தில் ஐபிசி பிரிவின் 153 (A), 505 மற்றும் 117 ஆகிய பிரிவுகளின் கீழ் மெவினி மற்றும் காலித் ஆகியோருக்கு எதிராக FIR பதிவு செய்யப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதைக்குறித்து ஜிக்னேஷ் மேவானி கூறியதாவது:- 


நான் வெறுப்பைத் தூண்டும் வகையிலோ, வன்முறை தூண்டும் வகையிலோ எந்த ஒரு வாரத்தையும் பேசவில்லை. நான் குறிவைக்கப்பட்டு உள்ளேன். மகாராஷ்டிராவில் தலித்துகள் தாக்கப்பட்டது தொடர்பாக பிரதமர் மோடி மவுனம் கலைத்து, தனது நிலைபாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என ஜிக்னேஷ் மேவானி எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.


மேலும் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கே இப்படி என்றால், சாதாரண மக்களுக்கு என்ன நிலை ஏற்படும் எனவும் கேள்வியெழுப்பி உள்ளார். மேலும் டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் அலுவலகம் நோக்கி விரைவில் பேரணி நடத்தப்படும் எனவும் ஜிக்னேஷ் மேவானி கூறியுள்ளார்.