நான் கேரளாவிற்கு ஒரு ஆதரவாக வந்திருக்கிறேன், இதை அரசியல்மயமாக்க வேண்டாம் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த தொடர் கனமழை காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது. மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 324 பேர் பலியாகியுள்ளதாகவும், வெள்ளத்தில் சிக்கிய சுமார் 10 லட்சம் பேர் மீட்கப்பட்டு அரசு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.


தற்போது மழை நின்றுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் மறுசீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. கேரள வெள்ள நிவாரணத்திற்கு உலக நாடுகள், இந்தியா முழுவதுமுள்ள மாநிலங்கள் என பல்வேறு தரப்புகளில் இருந்து நிவாரண உதவிகள் குவிந்து வருகின்றன.


இந்நிலையில், தனது லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று இரண்டாவது நாளாக பார்வையிட்டு வருகிறார். இதை தொடர்ந்து, கொச்சியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், மத்திய அரசு கேரளாவிற்கு அளித்துள்ள வெள்ள நிவாரண நிதி குறைவு, இன்னும் அதிகமாக நிவாரண நிதியளிக்க வேண்டும் மத்திய அரசு கேரளா மக்களுக்கு கடமை பட்டுள்ளது இது கேரளா மக்களின் உரிமை என அவர் தெரிவித்தார். 


நான் கேரளாவின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டேன். முகாம்களில் தங்கியுள்ள மக்கள் அனைவரும் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். கண்ணீர் மல்க கூறினார். நான் இது குறித்து கேரளா முதலவரிடம் வீடுகளை இழந்த மக்களுக்கு விரைவில் வீடுகளை கட்டித்தர உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளேன். 


நான் கேரளா வருகை தந்துள்ளது மக்களுக்கு ஆதரவாகத்தான். இதை யாரும் அரசியலாக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்..!