வெங்காயத்தை சுவைத்ததில்லை: மத்திய அமைச்சரின் நக்கல் பதில்!
நான் வெங்காயத்தை இதுவரை சுவைத்ததில்லை..அதன் நிலவரம் குறித்து எனக்கு எப்படி தெரியவரும் என மத்திய சுகாதார இணை அமைச்சர் அஸ்வினி சவுபே தெரிவித்துள்ளார்
நான் வெங்காயத்தை இதுவரை சுவைத்ததில்லை..அதன் நிலவரம் குறித்து எனக்கு எப்படி தெரியவரும் என மத்திய சுகாதார இணை அமைச்சர் அஸ்வினி சவுபே தெரிவித்துள்ளார்
நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அனைத்து பகுதிகளிலும் விலை ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அனைத்து தரப்பு மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வெங்காயம் விலையை குறைக்க அரசு பல இறக்குமதி சலுகைகளை அளித்தாலும், விலை என்னவோ நம்மை மிரட்டி வருகிறது. விலை ஏற்றம் அடைந்துள்ளதால் சில ஓட்டல்களில் வெங்காயத்தை அதிகமாக சேர்த்து செய்யப்படும் உணவு வகைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் வெங்காய விலை உயர்வுக்கு மத்தியில், மத்திய சுகாதார இணை அமைச்சர் அஸ்வினி சவுபே தெரிவித்துள்ளதாவது:-
"நான் சைவ உணவு உண்பவன். நான் வெங்காயத்தை இதுவரை சுவைத்ததில்லை. எனவே, வெங்காயத்தின் நிலைமை (சந்தை விலை) பற்றி என்னைப் போன்ற ஒருவர் எப்படி அறிவார்". என்று தெரிவித்துள்ளார்.
;