பிஜேபியில் சேர பணம் வாங்கவில்லை, அமைச்சர் பதவி கொடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது
பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ ஒருவரின் பேட்டி அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர் சந்திப்பில் பேசிய கர்நாடக எம்எல்ஏ ஸ்ரீமந்த் பாட்டில் சொன்ன அனைத்தும், பாரதிய ஜனதா கட்சிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா: பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ ஒருவரின் பேட்டி அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர் சந்திப்பில் பேசிய கர்நாடக எம்எல்ஏ ஸ்ரீமந்த் பாட்டில் சொன்ன அனைத்தும், பாரதிய ஜனதா கட்சிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
2019ஆம் ஆண்டு கர்நாடகாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் போது, காங்கிரஸ், மத சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த 17 எம்.எல்.ஏ.,க்கள் விலகினார்கள். அப்போது காங்கிரசை சேர்ந்த பெலகாவி மாவட்டம் காக்வாடா சட்டசபை எம்.எல்.ஏ.,வாக இருந்த ஸ்ரீமந்த் பாட்டீல், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். எடியூரப்பா ஆட்சியில், ஜவுளி துறை அமைச்சராகவும் இருந்தார்.
பசவராஜ் பொம்மை ஆட்சியில் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால், இதுவரை அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படாததால் கடும் அதிருப்தியில் இருந்த ஸ்ரீமந்த் பாட்டீல், காக்வாடின் ஐநாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய கர்நாடக மாநில சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீமந்த் பாட்டில், பணம் வாங்காமல் பாஜகவில் சேர்ந்ததாக தெரிவித்தார். இதில் என்ன கட்சிக்கு சங்கடம் என்று தோன்றுகிறதா? முழுவதும் படியுங்கள்.
”காங்கிரஸில் இருந்து பாரதிய ஜனதா கட்சியில் சேரும்போது எனக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று என்னிடம் கேட்டார்கள். ஆனால் நான் பணம் எதுவும் தேவையில்லை என்று சொல்லில்விட்டேன். மக்களுக்கு சேவை செய்யவேண்டும். எனவே எனக்கு அமைச்சர் பதவியை கொடுங்கள் அதுபோதும் என்று கேட்டேன்” என்று கர்நாடக எம்எல்ஏ ஸ்ரீமந்த் பாட்டில் தெரிவித்துள்ளார்.
Also Read | சுவிஸ் வங்கிக் கணக்கில் 3வது பட்டியல் விரைவில் கிடைக்கும்
அவர் இத்துடன் விடவில்லை, அடுத்த அமைச்சரவை விரிவாக்கத்தில் எனக்கு அமைச்சர் பதவி கொடுப்பதாக கட்சி மேலிடம் உறுதி அளித்தது. ஆனால் அது நடைபெறவில்லை. தற்போதைய அமைச்சரவையில் எனக்கு ஏன் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என்று கர்நாடக எம்எல்ஏ ஸ்ரீமந்த் பாட்டில் சரவெடியை கொளுத்தி போட்டுவிட்டார். அது தற்போது சமூக ஊடகங்களில் மட்டுமல்ல, அரசியல் வட்டாரங்களிலும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீமந்த் பாட்டீல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியபோது பாஜக அரசு பணக் கொடுப்பதாக தற்போது கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சியில் சேரும்போது, பணம் கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுவதும், அதற்கு மறுப்பு தெரிவிப்பதும் தொடர்ந்தாலும், இதுபோன்ற அதிருப்தி ஏற்படும்போது, உண்மைகள் வெளிச்சமாகிவிடுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
அமைச்சரவையில் என்னை சேர்த்துக்கொள்ளுமாறு மூத்த தலைவர்களுடன் நான் பேசினேன். மராத்தா சமூகத்தினரும் என் பக்கம் இருக்கின்றார்கள். அவர்களும் என்னை புதிய அமைச்சரவையில் சேர்க்கக் கோருகிறார்கள் என்றும் பாட்டீல் கூறினார். ஆனால், இதற்குப் பிறகு ஸ்ரீமந்த் பாட்டீலுக்கு அமைச்சராகும் வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.
Also Read | கொரோனா இறப்பு சான்றிதழ்! வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR