நான் என் தாயை இழந்தேன்: வருத்தத்தில் பாகிஸ்தான் நடிகை!
பாகிஸ்தான் நடிகையும் மாம் திரைப்படத்தில் ஸ்ரீதேவியின் மகளாக நடித்தவருமான சாஜல் அலி நான் எனது தாயை மீண்டும் இழந்து விட்டேன் என தனது வலைதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தான் நடிகையும் மாம் திரைப்படத்தில் ஸ்ரீதேவியின் மகளாக நடித்தவருமான சாஜல் அலி நான் எனது தாயை மீண்டும் இழந்து விட்டேன் என தனது வலைதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீதேவி தன் மறைவிற்கு முன்னால் கடைசியாக நடித்த படம் "மாம்" என்கிற இந்தித் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் ஸ்ரீதேவிக்கு மகளாக நடித்தவர் பாகிஸ்தானை சேர்ந்த நடிகை சாஜல் அலி.
நிஜ வாழ்வில் தாயை இழந்த சாஜல் அலிக்கு ஸ்ரீதேவி ஒரு தாய் போல அன்பு செலுத்தி உள்ளார். இதனால் ஸ்ரீதேவியுடன் அவர் மிகவும் நெருக்கமாக ஒரு மகளைப் போல் இருந்துள்ளார்.
தற்போது துபாயில் ஸ்ரீதேவி மரணம் அடைந்த செய்தி கேட்டு சாஜல் அலி மிகவும் துயர் அடைந்துள்ளார். தானும் ஸ்ரீதேவியும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை தனது 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர் "நான் என் தாயை மீண்டும் இழந்துள்ளேன்" என துக்கத்துடன் பகிர்ந்துள்ளார்.
மேலும், அதே திரைப்படத்தில் ஸ்ரீதேவியின் கணவராக நடித்த அட்னான் சித்திக்கி என்னும் பாகிஸ்தான் நடிகரும் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
நான் அவருடன் மாம் திரைப்படத்தில் நடித்தது எனக்கு ஒரு பெருமையாகும். அவர் இப்போது நம்முடன் இல்லை என்பத் எனக்கு பெரிதும் துக்கத்தை அளிக்கிறது. அவருடைய பாகிஸ்தான் ரசிகர்கள் அனைவரும் அவரை இழந்து தவிக்கின்றனர். அவருடைய இழப்பை தாங்கும் வலிமையை இறைவன் அவரது குடும்பத்துக்கு அளிக்க வேண்டும்" என இரங்கல் செய்தி அளித்துள்ளார்.