தலைவர் பதவியேற்கும் ராகுல் காந்தி - ஓய்வு பெறும் சோனியா காந்தி
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி கடந்த 11-ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். நாளை அவர் பதவியேற்க உள்ளார்.
கடந்த 19 ஆண்டுகளாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி பதவி வகித்து வந்தார். உடல் நிலையை காரணமா காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதனையடுத்து, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிட்டார். அதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார். ஆனால் அவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், கடந்த 11-ம் தேதி ராகுல் காந்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாளை டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி பதவியேற்க உள்ளார்.
இந்த நிலையில், இன்று பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியதால், அதில் கலந்துக்கொள்ள வந்த சோனியா காந்தியிடம், நாளை காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி பதவியேற்ப்பதை பற்றி கேட்டதுக்கு, அவர் கூறியது, ஓய்வு பெறுவதுதான் தற்போது எனது பணி என கூறியுள்ளார்.