பார்லிமென்டில் நான் பேசினால் பூகம்பம் வரும் - ராகுல் காந்தி
பார்லிமென்டில் நான் பேசினால் பூகம்பம் வரும் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்டது தொடர்பாக பார்லிமென்ட் வளாகத்தில் ராகுல் காந்தி பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்டது தொடர்பாக விவாதிக்க மத்திய அரசு ஏன் தயங்கி வருகிறது. பிரதமர் நாடு முழுவதும் சென்று பேசி வருகிறார். ஆனால் பார்லிமென்டில் வந்து பேச பயப்படுகிறார். ரூபாய் நோட்டு வாபஸ் தொடர்பான விவாதம் நடத்த மத்திய அரசு தயங்குகிறது. ரூபாய் நோட்டு வாபஸ் தொடர்பாக என்னை பேச அனுமதிப்பதில்லை. நான் பேச அனுமதிக்கப்பட்டால், பிரதமர் பேச முடியாது இந்த விவகாரம் தொடர்பாக பார்லிமென்டில் என்னை பேச அனுமதித்தால், என்ன மாதிரியான பூகம்பம் ஏற்படும் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். ரூபாய் நோட்டு வாபஸ் மிகப்பெரிய மோசடி. விவாதத்திற்கு நாங்கள் தயாராக உள்ளோம். அனால் அரசு தயங்குகிறது எனக்கூறினார்.
பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் லோக்சபா வரும் 14-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. ராஜ்யசபாவும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது.