MiG-21 விமானத்தை பயன்படுத்த தடை... விமான படை எடுத்துள்ள முக்கிய முடிவு!
இந்திய விமானப்படையில் 1960 களில் MiG-21 சேர்க்கப்பட்டதிலிருந்து தொடர் விபத்துகளின் வரலாற்றின் காரணமாக இந்த விமானம் `பறக்கும் சவப்பெட்டி` என்ற துரதிர்ஷ்டவசமான பெயரை பெற்றுள்ளது.
இந்திய விமானப்படை செய்திகள்: இந்திய விமானப்படையின் MiG-21 போர் விமானம் தொடர்ந்து விபத்துகளில் சிக்கி வரும் நிலையில், இந்திய விமானப்படை தடை விதித்துள்ளது.MiG-21 ரக விமானங்களின் இராணுவத்தில் முற்றிலுமாக வெளியேறுவதற்கான வழியை விமானப்படை காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் MiG-21 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு முன்பும் இதுபோன்ற பல விபத்துகளில் விமானிகள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துகள் காரணமாக, விமானப்படை இந்த விமானத்தை தற்காலிகமாக தடை செய்துள்ளது.
விமான விபத்து தொடர்பான விசாரணை நடக்கிறது
ராஜஸ்தானில் MiG-21ரக விமானம் விபத்துக்குள்ளான நிலையில், சம்பவம்குறித்த விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், சம்பவம் நடந்த , 2 வாரங்களுக்குப் பிறகு திடீரென இந்த விமானத்தை பறக்க தடை செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், 1963 ஆம் ஆண்டு MiG-21 ரக விமானம் இந்திய இராணுவத்தில் இடம் பெற்றது. இந்திய ராணுவம் தனனி தொடர்ந்து வலுப்படுத்தி வரும் நிலையில், விமானங்களையும், ஆயுதங்களைப் புதுப்பிக்க வேண்டியது அவசியமாகிவிட்டது. சமீபத்தில், தேஜாஸ் விமானம் ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்காக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் 48000 கோடி ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் 83 தேஜாஸ் விமானங்களை ராணுவத்தின் அங்கமாக்குவது குறித்து பேசப்பட்டது.
400 விமானங்கள் விபத்து
1960 களில் ராணுவத்தின் ஒரு பகுதியாக மாறிய MiG-21 விபத்துகளைப் பற்றி பேசுகையில், இதுவரை 400 விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. ஊடக அறிக்கைகளின்படி, வரும் 2025 ஆம் ஆண்டுக்குள், MiG-21 இராணுவத்திலிருந்து படிப்படியாக வெளியேற்றப்படும். விமானப் படையும் விமானப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக முன்னர் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக, அதன் இராணுவத்தில் 42 படைப்பிரிவுகளைச் சேர்க்க விரும்புகிறது, ஆனால் தற்போதைய நிலவரப்படி, இந்திய இராணுவம் 32 படைப்பிரிவுகளை மட்டுமே கொண்டுள்ளது.
மேலும் படிக்க | ₹ 2000: சட்டப்பூர்வமான பணத்தாள்! ஆனால் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்த முடியாது?!
விமானப்படையிடம் 50 MiG-21 விமானங்கள் உள்ளன
ராணுவத்திடம் தற்போது 50 மிக் 21 விமானங்கள் மட்டுமே உள்ளன என ஊடகங்களில் இருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 3 ஆண்டுகளுக்குள் அனைத்து விமானங்களுக்கும் ஓய்வு கொடுக்கப்படும். இந்திய விமானப்படை 114 மல்டி-ரோல் போர் விமானங்களை வாங்க தயாராகி வருகிறது. இது எதிர்காலத்தில் பயன்படுத்தப்படும்.
இந்திய விமானப்படையில் 1960 களில் MiG-21 சேர்க்கப்பட்டதிலிருந்து தொடர் விபத்துகளின் வரலாற்றின் காரணமாக இந்த விமானம் "பறக்கும் சவப்பெட்டி" என்ற துரதிர்ஷ்டவசமான பெயரை பெற்றுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் 400க்கும் மேற்பட்ட MiG-21 விமானங்கள் விபத்துக்குள்ளானதில், 200க்கும் மேற்பட்ட விமானிகள் மற்றும் 60 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் படிக்க | ரூ.2000 நோட்டுகள் இனி செல்லாது? RBI அறிவிப்பின் முழு விவரம் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ