உத்திரபிரதேச மாநிலம் பாகப்பட் அருகே இந்திய விமானப்படையின் மைக்ரோலைட் விமானம் விபத்துக்குள்ளானது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் பழுதடைந்து விபத்துக்குள்ளாகி வருவது வழக்கமான விஷயமாகிவிட்டது. 


இந்நிலையில் இன்று உத்திரபிரதேச மாநிலம் பாகப்பட் அருகே இந்திய விமானப்படையின் மைக்ரோலைட் விமானம் விபத்துக்குள்ளாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் விமான ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



விமான கோளாறு குறித்து முன்னதாக அறித்துக்கொண்ட விமான, விமானத்தை மக்கள் நடமாட்டம் இல்லாத வெற்று நிலத்தில் நேர்த்தியாக விமானத்தை தரையிறக்கியுள்ளார்.


முன்னதாக கடந்த மாதம் செப்டம்பர் 4-ஆம் நாள் இராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே இந்திய விமானப்படையின் MiG 27 வகைப் போர்விமானம் விபத்துக்குள்ளானது. 


இதேப்போல் கடந்த அக்டோபர் 1-ஆம் நாள் தமிழ்நாட்டின் அரக்கோணம் பகுதியில் உள்ள கனள்கனை விமான பயிற்சி மையமான INS ராஜாளியில் Chetak CH442 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. சம்பவத்தன்று காலை பயிற்சிக்காக புறப்பட்ட ஹெலிகாப்டர் பயிற்சியை முடித்து தரையிறக்க முற்பட்டபோது திடீரென பழுதாகி விழுந்து நொறுங்கியது.


தொடர்ந்து இந்திய போர்படையின் விமானங்கள் பழுதாகி விபத்துக்குள்ளாகி வரும் நிலையில் இன்று உத்திரபிரதேச மாநிலத்தில் மீண்டும் ஒரு விபத்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது!