கட்டாய விடுப்பில் உள்ள சிபிஐ இயக்குனர் ஆலோக் வர்மாவின் வீட்டுக்கு முன்பு சுற்றி திரிந்த நான்கு மர்ம நபர்களை கைது செய்தது உளவுத்துறையை சேர்ந்த அதிகாரிகள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது சிபிஐ இயக்குனர் ஆலோக் வர்மா கட்டாய விடுப்பில் உள்ளானர். இன்று (வியாழக்கிழமை) காலை டெல்லியில் உள்ள சிபிஐ இயக்குனர் ஆலோக் வர்மாவின் பங்களாவுக்கு வெளியில் நான்கு மர்ம நபர்கள் நீண்ட நேரமாக நோட்டமிட்டுள்ளனர். அங்கு மப்டியில் பாதுகாப்புக்காக இருந்த உளவுத்துறையை சேர்ந்த அதிகாரிகள் இதைக்கவனித்து வந்தனர். பின்னர் அவர்களை கைது செய்தனர்.


இதுக்குறித்து உளவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், டெல்லியில் பாதுகாப்பு நிறைந்த ஒரு பகுதியில், ஆலோக் வர்மா மாளிகையை நோட்டமிட்டு வந்தது, எங்களுக்கு சந்தேகத்தை ஏற்ப்படுத்தியது. பின்னர் அவர்களை தொடர்ந்து கண்காணித்தோம். அவர்கள் இந்த பகுதியை சார்ந்தவர்கள் அல்ல என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்து விசாரித்து வருகிறோம் எனக் கூறினார்.


 



ஏற்கனவே சிபிஐ இயக்குனர் ஆலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தனா இடையே மோதல் வெடித்ததை அடுத்து, இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு, புதிய சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர் ராவை நியமித்து உத்தரவிட்டார்.


தற்போது ஆலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா ஆகியோரை கட்டாய விடுப்பில் உள்ளனர். இந்நிலையில், ஆலோக் வர்மா வீட்டு முன்பு மர்ம நபர்கள் சுற்றி வந்தது சந்தேகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.