கொரோனா தொற்று (Corona Virus) பரவல் மீண்டும் மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், CBSE 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாகவும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஒத்திவைப்பதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் இரு நாட்களுக்கு முன்பாக அறிவித்தது. ஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலைமை மதிப்பாய்வு செய்யப்பட்டு பின்னர் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், இன்று, ஐசிஎஸ்இ (ICSE ), ஐஎஸ்சி (ISC) நடத்தும்10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக CISCE எனப்படும் இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் அறிவித்துள்ளது.


இது தொடர்பாக, ஜூன் மாதம் முதல் வாரத்தில் தேர்வுகள் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ALSO READ | CBSE: 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு: கல்வி அமைச்சகம்


CISCE வாரியத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வு மே 5-ம் தேதி தொடங்குவதாக இருந்தது. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 8-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.


கடந்த ஆண்டும் கொரோன பரவல் காரணமாக CISCE வாரியம் தேர்வுகளை ரத்து செய்தது. 


நாடு முழுவதிலும், கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தொடங்கி, தொற்று பாதிப்புகள் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, தில்லி, கேரளா, தமிழகம் உள்ளிட்ட சில இடங்களில் கொரோனா பரவல் அதிகம் உள்ளது. 


இதுவரை இல்லாத அளவிற்கு தேசிய அளவில் தொடர்ந்து, ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது பதிவகியுள்ளது. தேசிய அளவில் கடந்த 24 மணி நேரத்தில், 2.17 லட்சம் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 


கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 


ALSO READ | கொரோனா பரவல் எதிரொலி; நாசிக்கில் ரூபாய் நோட்டு அச்சிடும் பணி நிறுத்தம்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR