உக்ரைன் - ரஷ்யா போர் விவகாரத்தில் தொடர்ந்து நடுநிலை வகித்து வரும் இந்தியா, ஐநா சபையில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானங்கள் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்புகளை புறக்கணித்தது. மேலும் இந்தியாவுக்கு கச்சா எண்ணெயை பீப்பாய் ஒன்றுக்கு 35 டாலர்கள் தள்ளுபடி விலையில் வழங்க ரஷ்யா முன் வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பரபரப்பான சூழலுக்கு இடையே இந்தியா வந்துள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ், டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்தித்துப் பேசினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | போரை நிறுத்த முடியாது...சர்வதேச நீதிமன்ற உத்தரவை நிராகரித்த ரஷ்யா


இந்த சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ், ரஷ்யாவிடமிருந்து இருந்து இந்தியா வேறேதும் வாங்க விரும்பினால் அது குறித்து ஆலோசிக்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். இந்தியா ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்வதை அமெரிக்கா விரும்பாது எனவும், அமெரிக்க அழுத்தத்தால் இந்திய, ரஷ்யா உறவு எவ்விதத்திலும் பாதிக்காது எனவும் செர்கெய் லாவ்ரோவ் குறிப்பிட்டார். 


உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் அமெரிக்கா, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்தியப் பயணத்தையும் விமர்சித்துள்ளது. இந்தியா - சீனா இடையேயான எல்லைப்பிரச்சனை தீவிரமானால் ரஷ்யா இந்தியாவின் பாதுகாப்பிற்காக வரும் என்று யாரும் நம்பமாட்டார்கள் எனவும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. மேலும் சீனா ரஷ்யாவை விட அதிக செல்வாக்கு பெற்றால், அது இந்தியாவுக்கு சாதகமாக இருக்காது எனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.


மேலும் படிக்க | ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒரு போர்க் குற்றவாளி: ஜோ பைடன்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G