50ஆவது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நவம்பர் 20ஆம் தேதி முதல் நடைபெறும் என்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சர்வதேச திரைப்பட விழாக்களில் ஒன்று கோவா சர்வதேச திரைப்பட விழா. இந்த ஆண்டுக்கான 50-வது சர்வதேச திரைப்பட விழா வருகின்ற நவம்பர் 20 ஆம் தேதி முதல், 28 ஆம் தேதி வரை தொடர்ந்து 8 நாட்கள் நடைபெற்றுகிறது. இந்த விழாவில் சுமார் 80 நாடுகளைச் சேர்ந்த 200 படங்கள் திரையிடப்படுகிறது.  


இந்த ஆண்டு திரைப்பட விழாவில் ரஷ்யா கூட்டாளர் நாடாக இருக்கும் என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.


திரைப்பட விழாவில் சுமார் 26 திரைப்படங்கள் மற்றும் பல்வேறு இந்திய பிராந்திய மொழிகளில் 15 அல்லாத திரைப்படங்கள் திரையிடப்படும், எனவும் தெரிவித்துள்ளார். 


இது குறித்து மத்திய அமைச்சர் அளித்த பேட்டியில்; ‘50-ஆவது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நவம்பர் 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் 26 இந்திய திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு திரையிடப்படும்’ என்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.


மேலும், திரைப்பட விழாவில் பல திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் சுமார் 10,000 திரைப்பட ஆர்வலர்கள் பங்கேற்பார்கள் என்று திரு ஜவடேகர் கூறினார்.