இஸ்லாமிய மக்களிடையே முத்தலாக் மூலம் விவாகரத்து பெறும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த முறையை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து பாராளுமன்றத்தில் இன்று முத்தலாக் தடுப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 


மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இதனை தாக்கல் செய்தார். இந்த மசோதாவில், 3 ஆண்டுகள் சிறை தண்டனை நீக்கம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்டன. 


உறுப்பினர்கள் விவாதத்திற்கு பின்னர், இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 


மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவானது, மாநிலங்களவைக்கு அனுப்பப்படும். 



முன்னதாக இன்று காலை, பிரதமர் மோடி அனைத்து கட்சிகளின் ஒருமித்த ஆதரவோடு இந்த மசோதா நிறைவேற்றப்படும் என நம்புவதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது!