நீதிபதி என்.வி.ரமணா ஏப்ரல் 24 ஆம் தேதி இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள நிலையில், அவர் வழங்கிய முக்கிய தீர்ப்புகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

- 2019 நவம்பரில் தலைமை நீதிபதியின் அலுவலகம் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் பொது அதிகார அமைப்பு என  தீர்ப்பு.


- நவம்பர் 2019  அளித்த தீர்ப்பில், "பொது நலனில்" தகவல்களை வெளியிடுகையில் "நீதி சுதந்திரத்தை மனதில் கொள்ள வேண்டும்" என்று நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான நீதிமன்ற பிரிவு எனக் கூறியது


- கடந்த ஆண்டு ஜனவரியில் பேச்சு சுதந்திரம் மற்றும் இணையத்தில் வணிகம் நடத்துதல் ஆகியவை அரசியலமைப்பின் கீழ் பாதுகாக்கப்பட்ட விஷயங்கள் எனக் கூறி, ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் உடனடியாக தடை உத்தரவுகளை மறுஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தி உத்தரவிட்டார்.


- நவம்பர் 2019 இல், நீதிபதி ரமணா தலைமையிலான  நீதிமன்ற பிரிவு, குதிரை பேரம் நடத்தும் சாத்தியக் கூறு உள்ளதாகக் கூறி, அப்போதைய மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமியிலாம அரசு சபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது.


- முன்னாள் மற்றும்  தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகளை தீர்ப்பது தாமதப்படுத்துவது தொடர்பான பிரச்சினையை எழுப்பிய மனுவை நீதிபதி ரமணா தலைமையிலான பெஞ்ச் விசாரணை செய்தது. 


- அந்த வழக்கில், எதிரான நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகளை தீர்ப்பதில் "கணிசமான முன்னேற்றம் இல்லை" என்று கூறிய நீதிமன்ற பிரிவு, உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள்  இந்த பிரச்சனையை தீர்க்க சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பதற்கான  செயல் திட்டத்தை சமர்ப்பிக்குமாறு நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான நீதிமன்ற பிரிவு உத்தரவிட்டது.


47 வது தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுக்குப் பின் ரமணா ஏப்ரல் 24 ஆம் தேதி தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பார்.


ALSO READ | புதிய தலைமை நீதிபதி ரமணா கடந்து வந்த பாதை...


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR