ஜம்மு-காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில்  உள்ள எல்லை கட்டுபாட்டு பகுதியில், பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தை மீறி துப்பாக்கி சூடு நடத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கு ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.


ஜம்முவின் இந்திரேஷ்வர் நகர் பகுதியில் ஆகஸ்ட் 21-22 தேதிகளில் பாகிஸ்தான் துருப்புக்கள் துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர், மேலும் எல்லைப் பாதுகாப்புப் படை அதற்கு பதிலடி கொடுத்ததாக ANI தெரிவித்துள்ளது. 


மதியம் 1.30 மணியளவில், பாகிஸ்தான் இராணுவம்  சுந்தர்பானி செக்டரில்,  துப்பாக்கி சூடு மற்றும் மார்டர் ரக குண்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தியது . இது ஒரு வார காலத்திற்குள் சுந்தர்பானி செக்டார் பகுதியில் நடக்கும் இரண்டாவது சண்டைநிறுத்த மீறல் ஆகும்.


முன்னதாக, கத்துவா மாவட்டத்தின் ஹிராநகர் தெஹ்ஸில் எல்லை கிராமமான சக் சாங்காவில் பாகிஸ்தான் நடத்திய கடுமையான ஷெல் தாக்குதலில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. ஷெல் தாக்குதலில் கோபமடைந்த உள்ளூர் மக்கள் "பாகிஸ்தான் முர்தாபாத்" கோஷங்களை எழுப்பினர் என ANI தெரிவித்தது.


அப்பகுதியில் வாழும் மக்கள் இது தங்களுக்கு தொடர் பிரச்சனையாக இருப்பதாக கூறுகின்றனர்.


பாகிஸ்தான் தரப்பில், வீடுகள் , கோவில்கள் என அனைத்தின் மீதும் தாக்குதல் நடத்தி வருவதாக கூறுகின்றனர்.


ALSO READ | தலைமுறை கடந்தும் மாறாத தலைமை.. இந்திரா முதல் இன்று வரை நீடிக்கும் ஆதிக்கம்..!!!