பாதுகாப்பு படையினரின் மிகப்பெரிய வெற்றியாக ஹிஸ்புல் கமாண்டர் கொலை..!!
ஹிஸ்புல் முஜாஹிதீன் (Hizbul Mujahideen) கமாண்டர் சைபுல்லா ஞாயிற்றுக்கிழமை நகரின் புறநகரில் நடந்த மோதலில் கொல்லப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். இது பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
ஸ்ரீநகர்: ஹிஸ்புல் முஜாஹிதீன் (Hizbul Mujahideen) கமாண்டர் சைபுல்லா ஞாயிற்றுக்கிழமை நகரின் புறநகரில் நடந்த மோதலில் கொல்லப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். இது பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
இந்த ஆண்டு மே மாதம் ரியாஸ் நாய்கூ கொல்லப்பட்ட பின்னர் இந்த அமைப்பின் கமாண்டராக இருந்த சைஃபுல்லா, காஷ்மீர் பள்ளத்தாக்கில் மிகவும் தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகளில் ஒருவர் என்றும், பாதுகாப்புப் படையினர் (BSF) மீது பல தாக்குதல்களில் ஈடுபட்டதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "இது காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல" என்று காஷ்மீர் (Kashmir) காவல் ஆய்வாளர் IGP), விஜய்குமார் என்கவுன்டர் நடந்த இடத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
காலையில் நடந்த சம்பவங்களை விவரித்த ஒரு அதிகாரி, பாதுகாப்புப் படையினர் பழைய விமானநிலையத்திற்கு அருகிலுள்ள ரங்கிரெத் பகுதியில் தீவிரவாதி இருப்பதாக வந்த உளவு தகவலை அடுத்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
படைகள் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், பயங்கரவாதிகள் (Terrorist) துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
படைகள் பதிலடி கொடுத்தன, இதன் விளைவாக மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். அந்த அதிகாரி அவரை, மிகவும் தேடப்பட்டுவந்த பயங்கரவாதி சைபுல்லா என்று அடையாளம் காட்டினார்.
என்கவுண்டர் நடந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
என்கவுண்டர் நடந்த இடத்திற்கு அருகே செய்தியாளர்களிடம் பேசிய ஐ.ஜி.பி குமார், தெற்கு காஷ்மீரில் இருந்து சைபுல்லா இங்கு வந்து ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததாக தெரிவித்தார்.
எனவே பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்து தாக்குதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது என்றார்.
எங்களிடம் உள்ள ஆதாரத்தின் படி, கொலைசெய்யப்பட்ட பயங்கரவாதி சைபுல்லா என்று 95 சதவீதம் உறுதியாக உள்ளோம்.
ALSO READ | Uniform Civil Code: பிரான்சிலிருந்து இந்தியா வரை வலுக்கும் கோரிக்கை..!!!
ஜம்மு காஷ்மீரில் (Jammu and Kashmir) உள்ள காவல்துறையின் நெட்வொர்க் வலுவடைந்துள்ளதாகவும், எந்தவொரு பயங்கரவாதி நகரத்திற்குள் நுழைய முயற்சித்தால், அது குறித்த தகவல்களை போலீசார் உடனடியாக பெறுவதாகவும் குமார் கூறினார்.
என்கவுன்டர் நடந்த இடத்தில் இருந்து வேறு பயங்கரவாதி எவரும் உயிருடன் கைது செய்யப்பட்டாரா என்று கேட்கப்பட்டதற்கு, சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார் என்றார்.
மேலும் படிக்க | 'கடல் விமான' சேவைக்காக மேலும் 14 நீர் நிலையங்களை உருவாக்க அரசு திட்டம்..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR