புதுடெல்லி: உத்தரபிரதேசத்தின் (Uttar Pradesh) முசாபர்நகரில் வழக்கத்துக்கு மாறான ஒரு விஷயம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு குடும்ப நீதிமன்றம், ஒரு கணவர் தாக்கல் செய்த மனுவுக்கு தீர்ப்பளிக்கும் விதமாக, அவரது மனைவி அவருக்கு மாதாந்திர பராமரிப்பு கொடுப்பனவு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசு ஓய்வூதியம் பெறும் அந்தப் பெண்ணும், அவரது கணவரும் பல ஆண்டுகளாக தனித்தனியாக வசித்து வருகின்றனர்.


அந்த நபர் தனது மனைவியிடமிருந்து பராமரிப்பு கொடுப்பனவு கோரி 1955 ஆம் ஆண்டின் இந்து திருமணச் சட்டத்தின் கீழ் 2013 ஆம் ஆண்டில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.


புதன்கிழமை, குடும்ப நீதிமன்றத்தின் (Family Court) நீதிபதி புகார்தாரரின் மனுவை அனுமதித்து, அந்தப் பெண் தனது கணவருக்கு பராமரிப்பு கொடுப்பனவாக மாதத்திற்கு ரூ .1,000 செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.


ALSO READ: Watch Video: 5 mins-ல் 1.6 km அசால்டாய் ஓடி அசத்திய அமெரிக்காவின் 9 மாத கர்ப்பிணிப் பெண்!!


அந்த பெண் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் என்றும், மாதத்திற்கு ரூ .12,000 ஓய்வூதியமாக பெறுகிறார் என்றும் உத்தரவின் பின்னணியில் உள்ள காரணத்தை நீதிபதி மேற்கோளிட்டுள்ளார்.


இந்த வழக்கைப் பொறுத்தவரை, அதிக அளவில் எந்தத் தகவலும் வெளியே வரவில்லை. கணவனுக்கு எந்த வேலையும் இல்லை என்றும் அவர் கடுமையான பணப் பற்றாக்குறையை சந்தித்து வருகிறார் என்றும் எமது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


கணவனுக்கு நிலையான வருமானம் இருக்கும் நிலையில் கணவன் மனைவி விவாகரத்து பெற்றால், கணவன் மனைவிக்கு பராமரிப்பு கொடுப்பனவு கொடுப்பதைப் போல, நிலையான வருமானமாக பென்ஷன் பெறும் தன் மனைவியும் தனக்கு மாதந்தோறும் ஒரு தொகையை அளிக்க வெண்டும் என கணவன் வாதாடியுள்ளார். மேலும் தன் மனைவிதான் விவாகரத்திற்குக் காரணம் என்றும், அதனால் தன் வாழ்க்கையில் எற்பட்ட மனக்கஷ்டங்களுக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் அவர் பொறுப்பெற்க வேண்டும் என்றும் கணவன் நீதிமன்றத்தில் கூறியுள்ளதாகத் தெரிகிறது. 


ALSO READ: இனி mask-க கழட்ட வேண்டாம், அப்படியே சாப்பிடலாம்: வந்திடுச்சு Zip போட்ட Mask!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR