புதிய வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகளுக்கு அந்த சட்டத்தை பற்றிய சரியான புரிதல் இல்லை என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"புதிய வேளாண் சட்டங்களைப் (Farm Laws) பற்றிய இந்திய விவசாயிகளின் கருத்து" என்ற ஆய்வில், சட்டத்தை எதிர்க்கும் 52 சதவீதத்தினரில் 36 சதவீதம் பேருக்கு சட்டங்களின் விவரங்கள் தெரியவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.


அதே போன்று வேளாண் சட்டங்களை ஆதரிக்கும் 35 சதவீதம் பேரில், கிட்டத்தட்ட 18 சதவீதம் பேருக்கு இது குறித்து எதுவும் தெரியவில்லை என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. காவோ கனெக்‌ஷன் எனப்படும் ஊரக பகுதி மக்களுக்கான மிகப்பெரிய ஊடகமாக செயல்படும் நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியது.


நாடாளுமன்றத்தில் (Parliament) தாக்கல் செய்யப்பட்ட உழவர் உற்பத்தி, வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா, 2020, விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்திரவாதம் மற்றும் வேளான் சேவைகள் மசோதா, 2020, மற்றும் அத்தியாவசிய பொருட்கள் (திருத்த) மசோதா 2020 ஆகிய மூன்று வேளாண் மசோதாக்களுக்கும் (Farm Bill) குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் (Ram Nath Kovind)  ஒப்புதல் அளித்ததை அடுத்து அவை சட்டமாக்கப்பட்டன. 


புதிய பண்ணை சட்டங்கள் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை திறந்த சந்தையில், இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் தங்கள் விருப்பப்படி விற்க சுதந்திரம் அளிக்கின்றன.


ALSO READ |  ஹைதராபாத் சட்ட மாணவி 4042 அரிசியில் பகவத் கீதை எழுதி சாதனை..!!!


இந்த சட்டங்களுக்கு இடைத்தரகர்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானாவில், கடும் எதிர்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.


இந்த நேருக்கு நேர் கணக்கெடுப்பு நாட்டின் 16 மாநிலங்களில் 53 மாவட்டங்களில் அக்டோபர் 3 முதல் அக்டோபர் 9 வரை ஆய்வு நடத்தப்பட்டது


விவசாயிகளிடையே இந்த புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக நிலவும் மிகப்பெரிய அச்சம் என்னவென்றால், அவை இப்போது இருக்கும் திறந்த சந்தையில் தங்கள் பயிர் விளைபொருட்களை குறைந்த விலைக்கு விற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுமோ என அஞ்சுகின்றனர். அதே நேரத்தில் 33 சதவீத விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) முறையை அரசு முடிவுக்குக் கொண்டு வந்து விடுமோ என்று அஞ்சுகின்றனர்.


பல விவசாயிகள் எம்.எஸ்.பி முறையை இந்தியாவில் கட்டாய சட்டமாக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஐந்து ஏக்கருக்கும் குறைவான நிலத்தை வைத்திருக்கும் குறு மற்றும் சிறு விவசாயிகளில் பெரும் பகுதியினர் நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகளுடன் ஒப்பிடுகையில் இந்த வேளாண் சட்டங்களை ஆதரிக்கின்றனர்.


இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகளுக்கு அது பற்றிய விபரம்  தெரியவில்லை. விவசாயிகளில் பாதிக்கும் மேற்பட்டோர், நரேந்திர மோடி அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படும் அரசு என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.  அதேசமயம், சுமர் 25 சதவிகிதம் பேர் விவசாயிகளுக்கு எதிரான அரசு எனக் கூறியுள்ளனர். எ


ALSO READ |  கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா அசத்துகிறது என Bill Gates புகழாரம்..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR