அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இரண்டு நாள் இந்தியா பயணத்திற்கு முன்னதாக, தாஜ்மஹாலில் அவர் மேற்கொள்ள உள்ளதால் அழகுப்படுத்தும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோர் பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு வரவுள்ளனர். இந்த இரண்டு நாள் பயணத்தின் போது புது தில்லி மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களை விசிட் செய்கிறார் டிரம்ப் மற்றும் அவரது மனைவி. 


அமெரிக்க அதிபர் டிரம்ப் 24ம் தேதி இந்தியா வர உள்ள நிலையில், டெல்லியில் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அகமதாபாத்-ஆக்ரா-டெல்லி ஆகிய மூன்று இடங்களில் மொத்தம் 36 மணி நேரம் இருக்கும் டிரம்ப் 25ம் தேதி பிரதமர் மோடியுடன் பேச்சு நடத்துகிறார்.


உலகிலேயே மிகப்பெரிய பிரம்மாண்டமான கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். அவருடன் பிரதமர் மோடியும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கிறார். மேலும் அகமதாபாதில் இருந்து ஆக்ரா செல்லும் டிரம்ப் அங்கு தாஜ்மகாலை காண இருக்கிறார். 


டெல்லியில் பிப்ரவரி 25ம் தேதி பிரதமர் மோடியுடன் டிரம்ப் நேருக்கு நேராய் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார். டிரம்ப்பின் வருகையை ஒட்டி டெல்லியில் 24 மற்றும் 25ம் தேதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் 10 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.


இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து ஒரு பாதுகாப்புக் குழு திங்களன்று உலகின் மிக அழகான நினைவுச்சின்னங்களில் ஒன்றாகக் கருதப்படும் சின்னமான தாஜ்மஹால் பார்வையிட்டது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் அதே நாளில் அங்கு மறுஆய்வு செய்தார். 


டிரம்ப் ஆக்ரா சென்று தாஜ்மகாலை பார்வையிட உள்ளதால் அங்கு பாயும் யமுனா ஆற்றில் தண்ணீரை பாய்ச்சி தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. நாட்களுக்கு தொடர்ந்து  தண்ணீரை திறந்து விடுவதன் மூலம் ஆறு சுத்தம் அடைவதோடு அந்த பகுதியில் காற்று மாசுபாடு குறையும் என்று நம்பப்படுகிறது. மேலும் ஆக்சிஜனின் தரம் உயரும் என்பது அதிகாரிகளின் நம்பிக்கை. டிரம்ப் வருவதையொட்டி ஆக்ரா மற்றும் டெல்லியிலும் அவர் பயணிக்கும் சாலைகள், மேம்பாலங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு அழகுறச் செய்யப்பட்டு வருகின்றன.