2008 ஆம் ஆண்டு பட்லா ஹவுஸ் என்கவுன்டர் வழக்கில் டெல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் சந்த் சர்மா கொலை செய்யப்பட்ட வழக்கில் டெல்லி நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட இந்திய முஜாஹிதீன் பயங்கரவாதி அரிஸ் கானுக்கு திங்கள்கிழமை (மார்ச் 15) மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மரண தண்டனையை விதித்த கூடுதல் அமர்வு நீதிபதி சந்தீப் யாதவ் மரண தண்டனையை வழங்கும்போது அதை 'அபூர்வமான வழக்கு' என்று கூறி அரிஸ் கானுக்கு  மரண தண்டனையொடு ரூ .11 லட்சம் அபராதம் விதித்தார்.


இந்த வழக்கில் கானுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் அரசு தரப்பு கோரியது. குற்றவாளியின் வக்கீல், அவர் இளம் வயதானவர் அடிப்படையில், 
அவருக்கு தண்டனையை குறைக்க வேண்டும் என கோரினார்.


மார்ச் 8 ம் தேதி, இன்ஸ்பெக்டருமான மோகன் சந்த் சர்மா கொலை வழக்கில் நீதிமன்றம் ஆர்ஸ் கானை குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது, 


 186 பிரிவு( அரசு ஊழியரைத் கடமையை செய்ய விடாமல் தடுப்பது), 333 (வ்வேண்டும் என்றே கடுமையான காயத்தை ஏற்படுத்துவது), 353 (அரசு ஊழியரைத்  தாக்குவது) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 302 (கொலை) ஆகியவற்றின் கீழ் ஆரிஸ் கானுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
 


ALSO READ | TMC கொன்ற பாஜக தொண்டர்கள் தாய்மார்களின் இதய வலியை உணர்தீர்களா: அமித்ஷா


307 (கொலை முயற்சி), 174 (a) மற்றும் ஐபிசியின் 34 (குற்றவியல் நோக்கம்) மற்றும் பிரிவு 27 ( தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.


2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி, டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு ஜாமியா நகரில் உள்ள பட்லா ஹவுஸ்  வளாகத்தில் எண்கவுண்டர் நடத்தியது, இதில் இந்திய முஜாஹிதீன் பயங்கரவாதிகள் மற்றும் இன்ஸ்பெக்டர் சர்மா ஆகிய இருவர் கொல்லப்பட்டனர்.


ஆரிஸ் கான் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் பிப்ரவரி 14, 2018 அன்று கைது செய்யப்பட்டார்.


13 செப்டம்பர் 2008 அன்று தில்லியில் நடந்த ஐந்து தொடர் குண்டுவெடிப்புகளுக்கு ஒரு வாரம் கழித்து இந்த எண்கவுண்டர் சம்பவம் நடந்தது. தொடர் குண்டு வெடிப்பில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


ALSO READ | மதச்சார்பற்ற நாட்டில் அரசு ஏன் கோவிலை நடத்த வேண்டும்: சத்குரு கேள்வி


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR