500 ஆண்டுகள் நீண்ட காத்திருப்புக்கு பிறகு அயோத்தியில் (Ayodhya) ராம் கோயிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாத் கோயில் விஷயத்தில் எப்போது தீர்வு கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

12 ஜோதிலிங்கங்களில் ஒன்றான, காசியில் உள்ள ஜோதிர்லிங்கம், அது ஏற்கனவே இருந்த இடத்தில் நிறுவுவதற்கான சட்ட முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.  


இதற்கிடையில், காசி விஸ்வநாதர் ஞான்வபி மசூதி தொடர்பான வழக்கில்,  சுன்னி செண்ட்ரல் வக்ஃப் வாரியம் மற்றும் அனுஜம் இன்டெஜாமியா ஆகியோர், வழக்கு விசாரணையை மேற்பார்வையிட வேண்டும் என கோரும் மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.


மேலும், இந்த கோரிக்கை மனு மீதான விசாரணை நவம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


ALSO READ | காசி விஸ்வநாதர் ஆலயத்தின் மறைக்கப்பட்ட உண்மைகள்... வழக்கு விபரங்கள்..!!!


முன்னதாக செவ்வாய்க்கிழமை, இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் கண்காணிப்பு மனுவை ஏற்றுக்கொள்வது தொடர்பான விசாரணையின் போது, ​​சுன்னி வக்ஃப் வாரியம் சார்பாக வாதிட்ட வக்கீல்கள் தவுஹீத் கான் மற்றும் அபயநாத் யாதவ் ஆகியோர் சிவில் நீதிபதியின் உத்தரவு இறுதியானது என்று வாதிட்டனர். காசி விஸ்வநாதர் மற்றும் ஞான்வபி மசூதி இடையிலான வழக்கு 1991 முதல் நடந்து வருகிறது.


இந்த  வழக்கு சுமார் 30 ஆண்டுகள் பழமையானது. ஆனால் இந்த கோயில்-மசூதி தகராறு பல தசாப்தங்கள் பழமையானது. இந்த விவகாரம் சுதந்திரத்திற்கு முன்பே நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நேரத்தில், ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது இந்து தரப்பில் இருந்து அல்ல, ஆனால் முஸ்லிம் தரப்பிலிருந்து என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ஆகும். 


ALSO READ | ‘கிருஷ்ண ஜென்ம பூமியில்’ இருந்து மசூதியை அகற்ற கோரும் மனுவை ஏற்றது மதுரா நீதிமன்றம்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR