புதுடெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லி மற்றும் ஹரியானாவின் எல்லையான சிங்கு எல்லையில் தலித் இளைஞர் லாக்பீர் சிங் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தொடர்பாக,  குற்றம் சாட்டப்பட்ட சரப்ஜித் இன்று (சனிக்கிழமை) சோனிபத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம் சரப்ஜித்தை 7 நாள் போலீஸ் காவலுக்கு அனுப்பியுள்ளது. நிஹாங் சீக் சரப்ஜித் குண்டிலி காவல்நிலையம் முன் சரணடைந்து படுகொலை சம்பவத்தை தான் செய்ததாக ஒப்புக் கொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

18க்கும் மேற்பட்ட தலித் அமைப்புகள் கண்டனம்


சிங்கு எல்லையில் தலித் இளைஞர் லக்பீர் சிங் கொடூரமாக கொல்லப்பட்ட விதம் குறித்து போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி நாட்டின் 18 -க்கும் மேற்பட்ட தலித் அமைப்புகள் இன்று (சனிக்கிழமை) தேசிய பட்டியல் இன ஆணையத்தின் அலுவலகத்தை அடைந்து ஒரு கோரிக்கை மனுவை சமர்ப்பித்தன.


ALSO READ | சிங்கு எல்லையில் பயங்கரம்: விவசாயிகள் போராட்ட இடத்திற்கு அருகே வாலிபர் உடல்


தலித் அமைப்புகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தின


சிங்கு எல்லையில் தலித் இளைஞர் கொல்லப்பட்டது தொடர்பாக தலித் அமைப்புகள் தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையத்தின் தலைவர் விஜய் சம்பலாவை சந்தித்தனர். சிங்கு எல்லையில் ஒரு தலித் இளைஞர் கொடூரமாக கொல்லப்பட்ட விதம் குறித்து தலித் அமைப்புகளிடையே அதிருப்தி உள்ளது.


லாக்பீர் சிங்கின் உடல் பஞ்சாபில் உள்ள சீமா கிராமத்திற்கு அவரது உறவினர்களால் எடுத்துச் செல்லப்பட்டது. லாக்பீர் சிங்கின் பிரேத பரிசோதனையை மூன்று மருத்துவர்கள் குழு நடத்தியது. இறந்த லக்பீர் சிங்கின் உடல் போலீஸ் பாதுகாப்புடன் அவரது கிராமத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.


சிங்கள எல்லையில் வெள்ளிக்கிழமை லாக்பீர் சிங் என்ற தலித் இளைஞர் கொடூரமாக கொல்லப்பட்டார். அவர் விவசாய போராட்டத்தின்  (Farmers Protest) மேடைக்கு அருகில் கொல்லப்பட்டார். அவரது ஒரு கை துண்டிக்கப்பட்டது.


முன்னதாக நிஹாங் குழுவை சேர்ந்த சிலர், கொல்லப்பட்ட நபரை சுற்றி நின்றுகொண்டிருப்பதைக் காட்டும் ஒரு வீடியோ வெளிவந்தது. அவரது கை வெட்டபட்டிருப்பதையும், அவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதையும் அதில் காணலாம். அந்த நபரின் கண்களில் அதிர்ச்சியும் வலியும் தெரிகிறது.


ALSO READ: நவராத்திரி விழாவில் விவசாயிகள் போராட்டத்தின் காட்சிகள்: வைரலாகும் விழா வீடியோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR