தெலுங்கானாவில் ‛தாதா` நயீம் சுட்டுக்கொலை
தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் இருந்து, 60 கி.மீ., தூரத்தில் உள்ள ஷாத் நகரில், ரவுடிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை இன்று காலை நடந்தது. இதில் இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அதில் ஒருவன் ‛தாதா'. அவனது பெயர் நயீம். இவர் ஒரு முன்னாள் நக்சலைட் இருந்து, பின்னர் தாதாவாக மாறியவர். இவர் மீது ஏராளமான கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் இவன் தேடப்படும் குற்றவாளியாக போலீஸாரால் அறிவிக்கப்பட்டு இருந்தான்.
போலீசாருடன் இணைந்து தேசிய பாதுகாப்பு படையினரும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் நயீம் ஒரு பயங்கரவாதியாக இருக்கலாம் என்ற சந்தேகம் முதலில் ஏற்பட்டது. கடந்த 15 வருடங்களாக ரவுடி கும்பல் நடத்தி வந்த கேங்ஸ்டருமான நயீம் என்பது ஊடகங்களுக்கு பின்னர்தான் தெரியவந்தது. நயீம் கும்பல், போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்திய நிலையில் போலீசார் பதிலடி கொடுத்து நயீமையும் அவனது கூட்டாளி ஒருவனையும் சுட்டு கொன்றனர்.