புதுடெல்லி: கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருப்பதால், நடப்பு நிதியாண்டில் 15 ஜி மற்றும் 15 எச் படிவங்களை நிரப்ப தனி நபர்களுக்கு வருமான வரித்துறை ஜூன் 30 வரை காலத்தை நீட்டித்துள்ளது. வரி விலக்கிலிருந்து விலக்கு பெற இந்த படிவங்கள் நிரப்பப்பட வேண்டும். கோவிட் -19 தாக்கம் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த நேரடி ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட 15 ஜி மற்றும் 15 எச் படிவங்கள் 2020 ஜூன் 30 வரை செல்லுபடியாகும் என்று மத்திய நேரடி வரி வாரியம் (சிபிடிடி - CBDT) பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதாள் சிலருக்கு சரியான நேரத்தில் படிவங்களை சமர்ப்பிக்க முடியவில்லை என்று சிபிடிடி தெரிவித்துள்ளது. 


படிவங்களை சமர்ப் பிக்கவில்லை என்றால், அத்தகைய சூழ்நிலையில், அவற்றின் டி.டி.எஸ் (TDS) கழிக்கப்படும். இதுபோன்ற எந்தவொரு துன்புறுத்தலையும் மக்கள் எதிர்கொள்ளக்கூடாது என்று தான் மத்திய அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது எனவும் கூறப்பட்டு உள்ளது.


2019-20 நிதியாண்டில் ஒரு நபர் செல்லுபடியாகும் 15 ஜி மற்றும் 15 எச் படிவத்தை வங்கி அல்லது பிற நிதி நிறுவனங்களில் சமர்ப்பித்திருந்தால், அவை 2020-21 நிதியாண்டில் 2020 ஜூன் 30 வரை செல்லுபடியாகும் என்று சிபிடிடி தெரிவித்துள்ளது.  மூத்த குடிமக்களுக்கு படிவம் 15 எச் (15H) சமர்ப்பிக்கப்பட வேண்டியது அவசியம். அதேபோல  படிவம் 15 ஜி (15G) வருமானம் விலக்கு வரம்பை விட குறைவாக உள்ளவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.