கொரோனா வைரஸ் கோவிட் -19 தொற்றுநோயால் 2018-19 நிதியாண்டிற்கான வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை, புதன்கிழமையன்று மத்திய நேரடி வரி வாரியம் (CBDT) செப்டம்பர் 30 வரை நீட்டித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"கோவிட் தொற்றுநோயால் ஏற்படும் தடைகள் காரணமாகவும் வரி செலுத்துவோருக்கான இணக்கங்களை மேலும் எளிதாக்குவதற்கும், CBDT, (FY 2018-19) 2018-19 நிதியாண்டுக்கான (AY 2019-20) வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை 2020 செப்டம்பர் 20 வரை நீட்டித்துள்ளது. முன்னர் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆக இருந்தது.” என்று வருமான வரித்துறை (Income Tax Department) ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.



2018-19 நிதியாண்டிற்கான அசல் மற்றும் திருத்தப்பட்ட வருமான வரியை தாக்கல் செய்ய வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு வழங்கியுள்ள மூன்றாவது நீட்டிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ: PM KISAN: ஆக., 1 முதல் விவசாயிகளின் கணக்கில் ₹.2000 செலுத்தபடும்!


கொரோனா வைரஸ் கோவிட் -19 தொற்றுநோயால் மார்ச் மாதத்தில், மத்திய அரசு, வருமான வரி தாக்கல் செய்வதற்கான தேதியை மார்ச் 31-லிருந்து ஜூன் 30 வரை நீட்டித்தது. பின்னர் ஜூன் மாதத்தில், தேதி மீண்டும் ஜூலை 31 வரை ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது.


கொடுக்கப்பட்டுள்ள காலக்கெடுக்குள், அதாவது செப்டம்பர் 30, 2020 க்குள் ஒருவர் தாமதமான ஐ.டி.ஆரை (Belated ITR) தாக்கல் செய்யத் தவறினால், அவர் / அவள் 2018-19 நிதியாண்டிற்கான வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய முடியாது. இந்த காலக்கெடுவிற்குள் ஒரு நபர் FY2018-19 க்கான திருத்தப்பட்ட ஐ.டி.ஆரை தாக்கல் செய்யலாம் என்று CBDT கூறியுள்ளது.