Independence Day 2021: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு
செங்கோட்டை பகுதியில் பாதுகாப்பின் கீழ், சுமார் 9 ட்ரோன் ரேடார்கள் (Anti-drone radars) மூலம் கண்காணிக்கப்படும். இதனுடன், ஒவ்வொரு செயல்பாடும் சுமார் 300 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.
புது டெல்லி: 75-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) ஏற்றுவார். சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளதால், பாதுகாப்பு கருதி ஆயிரக்கணக்கான வீரர்கள், நூற்றுக்கணக்கான சிசிடிவி கேமராக்கள் (CCTV cameras) மற்றும் ட்ரோன் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் முக்கியமான இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
ட்ரோன் ரேடார்கள் மூலம் கண்காணிப்பு:
செங்கோட்டை பகுதியில் பாதுகாப்பின் கீழ், சுமார் 9 ட்ரோன் ரேடார்கள் (Anti-drone radars) மூலம் கண்காணிக்கப்படும். இதனுடன், ஒவ்வொரு செயல்பாடும் சுமார் 300 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். பாதுகாப்பு அமைப்பில் 5000 க்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
40 ஆயிரம் வீரர்கள் நியமிக்கப்படுவார்கள்:
தேசிய தலைநகரம் டெல்லி முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்படுவார்கள். முன்னெச்சரிக்கையாக டெல்லியின் அனைத்து எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. சில இடங்களில் பலத்த பாதுகாப்பு மற்றும் சோதனை தொடங்கப்பட்டுள்ளது. சுதந்திர தின விழாவில் பங்கேற்க வரும் ஒவ்வொரு பார்வையாளரும் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறார்கள்.
பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள வீரர்கள்:
இந்த பாதுகாப்பு ஏற்பாட்டில், காவல்துறை தவிர, துணை ராணுவப் படைகள், என்எஸ்ஜி கமாண்டோக்கள், எஸ்பிஜி பணியாளர்கள் மற்றும் உயர் கட்டிடங்களில் குறிசுடுநர்கள் (Sniper) நிறுத்தப்பட்டுள்ளனர். அரசு கட்டிடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ALSO READ | ஆகஸ்ட் 14 பிரிவினை கொடுமைகளை நினைவுகூறும் நாளாக அனுசரிக்கப்படும்: பிரதமர்
பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை:
ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தையொட்டி நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கையுடன் செயல்பட்டி வருகின்றன. இதில் முக்கியமாக காலிஸ்தானி பயங்கரவாதிகளின் (Khalistani terrorists) அச்சுறுத்தல் இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பயங்கரவாதிகள் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன மற்றும் அவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகளும் எழுதப்பட்டுள்ளன. எனவே பொதுமக்களும் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
ALSO READ | தில்லியில் high alert: டிரோன் தாக்குதல் நடக்கக்கூடும் என எச்சரித்த உளவுத்துறை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR