இந்தியா மற்றும் சீன வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பு!
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் புது டெல்லியில் சந்திப்பு.
டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) இந்தியா, சீனா, ரஷியா ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இதில் உலக அளவில் உள்ள பிரச்சினைகள் குறித்தும், தீவிரவாத, பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வழிகள் குறித்தும் விவாதிக்கிறார்கள்.
இதையடுத்து, சீன வெளியுறவு மந்திரி வாங் யி உடன் இந்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் சந்தித்தனர். இதில், முக்கிய பிரச்சினைகள் குறித்து தனியாக பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.
டோக்லாம் எல்லை பிரச்சினைக்கு பின்னர் முதல் முறையாக சீனாவின் உயர்மட்ட தலைவர் வருகை குறிப்பிடத்தக்கது. அதேபோல ரஷிய மந்திரி செர்ஜி லவ்ரோவ் உடனும் சுஷ்மா சுவராஜ் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.