ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அமெரிக்காவில் போலீஸ் வாகனம் மோதி உயிரிழந்த விவகாரத்தில், விபத்தை ஏற்படுத்திய போலீஸ் அதிகாரி கேலி செய்து பேசும் வீடியோ வெளியான நிலையில், இந்தியா தனது வலுவான கண்டனத்தை பதிவு செய்துள்ளது. ஜனவரி 23 அன்று சியாட்டிலில் போலீஸ் அதிகாரி கெவின் டேவ் ஓட்டிச் சென்ற ரோந்து கார் மோதி ஜாஹ்னவி கந்துலா கொல்லப்பட்டார். வாகனத்தை ஓட்டி வந்த கெவின் டேவ் என்ற போலீஸ் அதிகாரி, மணிக்கு 120 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் வாகனத்தை ஓட்டி கவனக்குறைவாக மாணவியின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பதினொன்றாயிரம் டாலர்  கொடுத்தால் போதும்: காவல் துறை அதிகாரியின் கேலி பேச்சு


விபத்தை ஏற்படுத்தி மாணவி இறந்த உடன் அந்த போலீஸ் அதிகாரி, சியாட் காவல்துறை அதிகாரிகள் சங்கத்தின் துணைத் தலைவர் டேனியல் ஆடரர் என்பவருடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசுகையில், விபத்தில், மாணவி இறந்து விட்டது குறித்து கொஞ்சமும் வருத்தம் கொள்ளாமல் கிண்டலாக பேசியுள்ளார். இது அவரின் உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமிராவில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோ பதிவில் அவர், "ஒரு பெண் இறந்து விட்டாள்..... சாதாரணமான பொண்ணுதான்.. ஆமாம் ஒரு செக் தயார் செய்து வையுங்க.. பதினொன்றாயிரம் டாலர்  கொடுத்தால் போதும்.. அவளுக்கு அவ்வளவு தான் மதிப்பு" என சிரித்துக் கொண்டே பேசியுள்ளார்.


இந்திய துணைத் தூதரகம் கடும் கண்டனம்


சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் புதன்கிழமை, "ஜாஹ்னவி கந்துலாவின் மரணத்தை கேலி செய்யும் வகையில் பேசியுள்ளது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்று கூறினார். “இந்த மிக சோகமான வழக்கில் தொடர்புடையவர்கள் மீது முழுமையான விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சியாட்டில் & வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகளிடமும், வாஷிங்டன் டிசியில் உள்ள மூத்த அதிகாரிகளிடமும் நாங்கள் இந்த விவகாரத்தை வலுவாக எழுப்பியுள்ளோம். துணைத் தூதரகம் மற்றும் தூதரகம் இந்த விவகாரத்தில் அனைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கைகள் குறித்து தகவல் கோரும் ” என்று இந்திய துணைத் தூதரகம் X தளத்தில் பதிவிட்டுள்ளது. 23 வயதான பட்டதாரி மாணவி ஜனவரி 23 அன்று சியாட்டிலில் போலீஸ் அதிகாரி கெவின் டேவ் ஓட்டிய ரோந்து கார் மோதி கொல்லப்பட்டார். செய்திகளின்படி, டேவ் காரை 74 mph (119 kmph) வேகத்தில் ஓட்டிச் சென்றதாகவும், மாணவியின் உடல் 100 அடி (30 மீட்டர்) தூரத்திற்குத் தூக்கி எறியப்பட்டதாகவும் கூறப்படுகிறது.



மேலும் படிக்க | மனித இனத்தின் அழிவு கடும்குளிராலா? 1280 பேரால் மனிதகுலம் உயிர்பிழைத்த வரலாறு


சம்பவத்தை கேலி செய்த அமெரிக்க போலீஸ் அதிகாரி


குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி டேனியல் ஆடரரின் உடல் கேமராவில் இருந்து சியாட்டில் காவல் துறை திங்களன்று காட்சிகளை வெளியிட்டதைத் தொடர்ந்து பெரும் சீற்றம் வெடித்தது. வீடியோ கிளிப்பில், சியாட்டில் போலீஸ் அதிகாரிகள் கில்டின் துணைத் தலைவராக பணியாற்றும் ஆடரர் - கில்டின் தலைவர் மைக் சோலனுடனான அழைப்பில் விபத்து பற்றி பேசுவதைக் கேட்கலாம்.


யார் அந்த ஜாஹ்னவி கந்துலா


அமெரிக்காவின் சவுத் லேக் யூனியனில் உள்ள நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் படித்து வந்தவர் ஆந்திராவை சேர்ந்த ஜாஹ்னவி கந்துலா. இவர் கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதி டெக்ஸ்டர் அவென்யூ சாலை வழியே நடந்து சென்றுள்ளார். அப்போது சாலையை கடக்க முயற்சி செய்த போது அதிவேகமாக வந்த போலீஸ் வாகனம் மோதி 100 மீட்டர் தூரம் அவர் தூக்கி வீசப்பட்டார்.


மேலும் படிக்க | லிபியாவில் அழிவை ஏற்படுத்திய டேனியல் புயல்! 2000 க்கும் மேற்பட்டோர் பலி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ