இந்தியா சிமிண்ட்ஸ் தன்னுடைய புதிய தயாரிப்பான கான்க்ரீட் சூப்பர் கிங்ஸ்(சி.எஸ்.கே ) மற்றும் ஹலோ சூப்பர் கிங்ஸ் (ஹெச்.எஸ்.கே. )என்ற பெயரில் புதிய வகை சிமெண்ட் பிராண்டுகளை தொடங்கியுள்ளது. இதன் அறிமுக விழா சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் சிஎஸ்கே ரசிகர்களை கவரும் வகையில் இரண்டு சிமெண்ட் பிராண்டுகள் அறிமுகமாகியுள்ளது.


 இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில்  பங்கேற்றனர்.தொடர்ந்து, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சந்தையாக்கல் துறையின் துணை தலைவர் மகேந்திர சிங் தோனி வீடியோ பதிவு மூலம் புதிய பிராண்டுகளை அறிமுகம் செய்து வைத்தார்.


மேலும் படிக்க | ரஷ்யாவிடம் இருந்து இந்தியா சலுகை விலையில் எண்ணெய்: அமரிக்கா கூறுவது என்ன!


பின்னர் பேசிய நிர்வாக இயக்குனர் சீனிவாசன்,சிமெண்ட் என்பது ஒரு நாள் மட்டுமல்லாமல் காலம் முழுவதும் நீடித்து நிலைக்கக் கூடிய ஆற்றல் உள்ள தயாரிப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், கட்டிடங்கள் விரிசல் விழுவது, வெடிப்பு ஏற்படுவது, நீர் கசிவு போன்ற பிரச்னைகளை எதிர்கொள்கிறது. 


இதை முற்றிலும் தவிற்து தரமான கட்டுமானத்தை உறுதி செய்யும் வகையிலும், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் கட்டுமானத்துறையை சேர்ந்தவர்களுக்கு நலன்  ஏற்படுத்தும் விதமாகவும் கான்கிரீட் சூப்பர் கிங் (சிஎஸ்கே) உருவாக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். மேலும் நீண்டகால நிலைப்புப் தன்மையை உறுதி செய்யும் வகையில் அனைத்து தயாரிப்புகளுமே ப்ரீமியம் தரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 


மேலும் படிக்க | பஞ்சாப் மாநிலத்தின் 17வது முதலமைச்சர் பகவந்த் மான்! 11 ஆண்டு அரசியல் பயணம்.