சீனா எப்போதுமே நம்பத்தகுந்த நாடு அல்ல என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது. இன்று காலை, சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர், ஜாவோ லிஜியான் (Zhao Lijian),  இந்தியாவிற்கும் சீனாவிற்கு இடையே நம்பகத்தன்மையை ஏற்படுத்தவும், கருத்த வேறுபாடுகளை நீக்கவும் சீனா தயாராக உள்ளது எனக் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், அவர்கள் செல்வது ஒன்று செய்வது ஒன்றாக உள்ளது. திபெத்தில் உள்ள இந்திய எல்லை அருகே சீனா பீரங்கி துப்பாக்கிகளை நிறுத்தியுள்ளதால் லடாக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.


ஜூலை கடைசி வாரத்திலிருந்து திபெத் எல்லை பகுதிகளில் 4,600 மீட்டர் உயரமான இடத்தில்  பீரங்கித் துப்பாக்கிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனம் IANS கூறுகிறது 


லடாக்கின் மேற்கு பகுதி, உத்திராகண்ட் ஹிமாசல் பிரதேசத்தில் உள்ள சில பகுதிகள் மற்றும் சிக்கிம், அருணாசலபிரதேசத்தில் உள்ள கிழக்கு பகுதி ஆகிய இடங்களில் உள்ள எல் ஏ சி (LAC) பகுதிகளில்,  சீனா  துருப்புகளை நிறுத்தியுள்ளது.


காலாபானி பள்ளத்தாக்கின் மேல் அமைந்துள்ள இந்திய, சீனா மற்றும நேபாளம் என மூன்று நாடுகளின் எல்லை பகுதியின் சந்திப்பான உத்திரகண்டின் லிபுலேக் பாஸ் என்ற இடத்திலும் சீனா துருப்புகளை நிறுத்தியுள்ளது.


பல சுற்று இராணுவ மற்றும் இராஜீய நிலையிலான பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் போதிலும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை பதற்றம் தீர்க்கப்படவில்லை. படைகளை விலக்கிக் கொள்வதாக சீனா, இந்திய இராணுவத்திற்கு பலமுறை உறுதி அளித்த போதிலும், சீனா எல்லைப் பகுதிகளுக்கு அருகில் நிரந்தர கட்டமைப்புகளை அமைத்துள்ளது.


ALSO READ | குளிரில் உறையப்போகும் லடாக்.. இனியாவது எல்லையில் தொல்லைகள் தீருமா..!!


இதன் மூலம் சீனாவின் மனநிலையை நன்றாக அறிந்து கொள்ளலாம்.


ஜூன் 15 அன்று, கால்வான் பள்ளத்தாக்கில், இந்திய சீன துருப்புகளுக்கு இடையே  நடந்த வன்முறை மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். சீன துருப்புக்களை சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர்.


எனினும், சீனா(CHINA)  இன்றைய நாள் வரை, எத்தனை பேர் இறந்தனர் என சரியான தகவலை வெளியிடவில்லை. இறந்த ராணுவத்தினருக்கு எந்த விதமான மரியாதையையும் கொடுக்கவும் இல்லை. 


ALSO READ | சீனாவிலிருந்து இந்தியவிற்கு இடம் பெயர தாயாராகும் 24 மொபைல் நிறுவனங்கள்...!!!


 


இந்தியா ராணுவத்தின் வலிமை  ரஃபேல் விமானத்தின் வருகையினால் பல மடங்கு  அதிகரித்துள்ள நிலையில், சீனா வாலாட்டினால், ஒட்ட நறுக்கப்படும் என்பது உறுதி.