இந்தியா-சீனா எல்லை பிரச்சனை; லடாக் சென்ற பிரதமர் மோடி; உன்னிப்பாக கவனிக்கும் உலக நாடுகள்
எல்லையில் இருநாடுகளுக்கும் இடையில் மோதல் நிலவிவரும் நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடி அங்கு பயணம் செய்திருப்பது, உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
புது டெல்லி: இந்தியா மற்றும் சீனா இடையே எல்லையில் பதற்றம் நிலவி வரும் வேளையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி நமது இராணுவ வீரர்களுக்கு ஒரு பெரிய ஆச்சரியத்தை அளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி திடீரென இன்று காலை லடாக் (PM Modi Ladakh Visit) சென்றடைந்தார். பிரதமர் மோடி லே (Leh Airport) விமான நிலையத்தை அடைந்தார். அவர் கால்வன் பள்ளத்தாக்குக்குச் செல்வாரா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. உங்களுக்கு நினைவிருக்கலாம், கால்வன் பள்ளத்தாக்கு பகுதியில் தான் இந்திய ராணுவமும் சீன இராணுவம் மோதிக்கொண்டது.
எல்லையில் இருநாடுகளுக்கும் இடையில் மோதல் நிலவிவரும் நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) அங்கு பயணம் செய்திருப்பது, உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
முன்னதாக, விமானப்படைத் தலைவரும், ராணுவத் தலைவரும் லே (Leh) விமான நிலையத்தை அடைந்தனர். கால்வனில் நடந்த வன்முறை மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று மீண்டும் இராணுவத்தில் இணைந்த வீரர்களை பிரதமர் மோடி (Narendra Modi) சந்திப்பார் என்று தகவல் தெரிவிக்கிறது.
பிற செய்தி | சீனாவுக்கு மற்றொரு அதிர்ச்சி: சீன தயாரிப்புகளை தடை செய்த இந்த மத்திய அமைச்சகம்
பிற செய்தி | இந்தியாவின் இராஜதந்திரத்தால் பீதியில் சீனா... இந்தியாவை மிரட்டிப் பார்க்கிறது...!!!
இந்தியா-சீனா (India-China) பதற்றத்திற்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடியே நிலைமையை அறிந்து கொள்ள லே பகுதிக்கு சென்றுள்ளார். அவருடன் சி.டி.எஸ் (CDS) ஜெனரல் பிபின் ராவத்தும் வருகை தந்துள்ளார். தகவல்களின்படி, பிரதமர் மோடியும் பாதுகாப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். முன்னதாக பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் (Rajnath singh) லே செல்ல உள்ளதாக செய்தி வந்தது, ஆனால் சில காரணங்களால் அவரது திட்டம் ரத்து செய்யப்பட்டது.
சீனாவுக்கு (China) எதிரான பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. உலகின் பெரிய மற்றும் சக்திவாய்ந்த நாடுகளுடன் இந்தியா இணைந்துள்ளது. சீனாவின் பொருளாதாரத்தை பின்னடைவு செய்யும் விதமாக சரியான திட்டமிடலுடன் ஒவ்வொரு முயற்சியும் மேற்கொண்டு வருகிறது.