மக்களை பலனடைய செய்வதே தனது இலக்கு: பிரதமர் மோடி!
ஜோர்டான், பாலஸ்தீனத்தை தொடர்ந்து பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அபுதாபியில் பட்டத்து இளவரசர் அல் நெஹாயானுடன் இருதரப்பு உறவு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர்.
துபாய் சென்ற பிரதமர் துபாயில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, மக்களை பலனடைய செய்வதே தனது இலக்கு எனக்கூறினார். ஜோர்டான், பாலஸ்தீனம் நாடுகளைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அபுதாபி இளவரசர் அல் நெஹாயானுடன் ஆலோசனை நடத்தினார்.
இரு நாடுகளிடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. பின்னர் , அபுதாபியில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இந்த பயணத்தின் முக்கிய அம்சமாக அபுதாபியில் கட்டப்பட உள்ள இந்து கோயிலுக்கு மோடி அடிக்கல் நாட்டினார்.
பின்னர் துபாய் சென்ற அவர் அங்கிருந்த இந்தியர்கள் மத்தியில் பேசினார். நல்லிணக்கம் அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: துபாயில் அதிகளவில் இந்தியர்கள் வாழ்கின்றனர். இங்கு மீண்டும் வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியா ஐக்கிய அரசு எமிரேட்ஸ் இடையிலான உறவு வர்த்தகத்தை தாண்டியது. வளைகுடா நாடுகளில் 30 லட்சம் இந்தியர்கள் வேலை பார்க்கின்றனர். அந்நாடுகளின் வளர்ச்சிக்கு உதவி செய்கின்றனர்.
அரபு நாடுகள், இந்தியர்களுக்கு 2வது தாய் வீடாக திகழ்கிறது. அபுதாபியில் கோயில் கட்ட அனுமதி வழங்கிய பட்டத்து அரசருக்கு,125 கோடி மக்கள் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறேன். கோயில்கள் நல்லிணக்கத்திற்கு உதாரணமாக திகழ்கின்றன. நாடு வளர்ச்சி 4 வருடங்களாக நாட்டிற்காக கடுமையாக உழைத்துள்ளேன்.
கடந்த 4 வருடங்களில் இந்தியர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. நாடும் வளர்ச்சியடைந்துள்ளது. 21ம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு. மகாத்மா காந்தி கொள்கைகளை பின்பற்றி வருகிறோம்.
மக்களை பலனடைய செய்வதே எனது நோக்கம். கறுப்பு பணம் வைத்துள்ளவர்கள், 2 வருடமாகியும் இன்னும் அழுது கொண்டுள்ளனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த இந்திய வம்சாவளி மக்கள், அரங்கிற்கு பிரதமர் மோடி வந்த போது, மோடி, மோடி என உற்சாகமாக கோஷம் எழுப்பினர்.