புது டெல்லி: நாட்டில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், நாட்டின் அனைத்து மட்டங்களிலும் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இதுவரை சுமார் 8 கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளன. அதாவது டெல்லி மற்றும் ஹைதராபாத் தலா ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மறுபுறம் உ.பி. மாநிலத்தை சேர்ந்த ஆறு பேருக்கு கொரோனோ இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில், அவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய கடற்படை, தனது பல நாடுகளின் கடற்படை பயிற்சியான "மிலன் 2020" (MILAN 2020)  நிகழ்வை ஒத்திவைப்பதாக இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்தது. இது ஒன்று அல்லது இரண்டு நாடுகளுடனான ஒரு பயிற்சி அல்ல என்பதை உங்களுக்குச் சொல்கிறேன். சுமார் 40 நாடுகளின் கடற்படைகள் இந்த மெகா பயிற்சியில் பங்கேற்கப் போகின்றன. விசாகப்பட்டிணத்தில் மார்ச் 18 முதல் 28 வரை இந்த பயிற்சி நிகழ்வு நடைபெற இருந்தது.


கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க கடற்படை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. விசாகப்பட்டினம் கடற்கரையில் நடைபெறவிருக்கும் பன்னாட்டு மெகா கடற்படைப் பயிற்சி தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து இந்திய கடற்படை, "கோவிட் -19" (COVID-19) பரவி வருவதால், பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து நாடுகளின் பாதுகாப்பை மனதில் வைத்து, இப்போது கடற்படை பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


மிலன் 2020 நிகழ்வுக்கு அனைத்து நாடுகளும் ஆதரவு அளித்தனர். உலகம் முழுவதிலுமிருந்து கடற்படை இந்த நிகழ்சியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்தது. எதிர்வரும் நாட்களில் இந்திய கடற்படை நிச்சயமாக இந்த பயிற்சியை செய்யும் என்று அந்த அதிகாரி கூறினார். மிலன் 2020 இல் சேர அழைப்பை ஏற்றுக்கொண்ட கடற்படை அனைவருக்கும் இந்திய கடற்படை மனமார்ந்த நன்றி தெரிவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.