5G நெட்வொர்கில் சாதனை படைத்த இந்தியா! 200 நாட்களில் 600 மாவட்டங்கள்!
5ஜி நெட்வொர்க் சேவையில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. சராசரியாக, இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 3 மாவட்டங்களுக்கு 5G நெட்வொர்க் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிவைத்தார். நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் 5ஜி திட்டங்களை வழங்கி வருகின்றன. 4ஜி தொலைத்தொடர்பு சேவையுடன் ஒப்பிடும் போது 5 சேவையில் இணையதள வேகம் 30 மடங்கு அதிக வேகமாக இருக்கும். 1 ஜிபி கொண்ட ஒரு கோப்பை 3 நொடியில் பதிவிறக்கம் செய்ய முடியும்.
G20 டிஜிட்டல் பொருளாதார பணிக்குழு
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட 200 நாட்களுக்குள் 600 மாவட்டங்கள் 5ஜி தொலைத்தொடர்புப் கவரேஜைப் பெற்றுள்ள நிலையில், உலகிலேயே அதிவேக 5ஜி கவரேஜை கொடுத்துள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும் என்று மத்திய தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சர் தேவுசின் ஜே. சவுகான் வலியுறுத்தினார். திங்களன்று ஹைதராபாத்தில் தொடங்கிய G20 டிஜிட்டல் பொருளாதார பணிக்குழுவின் (DEWG)மூன்று நாள் கூட்டத்தின் இரண்டாவது நாள் தொடக்க அமர்வில் பேசிய சௌஹான், உலகின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நெட்வொர்க்கின் மிகக் குறைந்த தரவு கட்டணத்துடன் சேவை வழங்கும் நிலையை இந்தியாவைக் கொண்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டு 4G மற்றும் 5G தொழில்நுட்பங்களை விரைவாக உருவாக்குவதன் மூலம் உலகத்தை இந்தியா ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் படிக்க | கூகுள் பிளேஸ்டாரில் ஆபத்தான மால்வேர்: ஆபத்தில் ஆண்ட்ராய்டு போன்கள்
இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நெட்வொர்க் இந்தியா
இது தவிர, இந்தியா உள்நாட்டு 4ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது. 5ஜி நெட்வொர்க்கின் உதவியுடன், லைட் மைல் அதிவேக இணைப்பு மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் கூறினார். இதனுடன் கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற டிஜிட்டல் சேவைகளும் பயன்பெறும்.
5G நெட்வொர்க் சேவை பரவியுள்ள நகரங்கள்
5ஜி சேவை பற்றி பேசுகையில், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் மூலம் 5ஜி சேவை இந்தியாவில் வழங்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ இதுவரை மொத்தம் 406 நகரங்களில் True 5G நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தியுள்ளது. 265க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 5ஜி சேவையை ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய இரு நிறுவனங்களும் தங்கள் பயனர்களுக்கு வரம்பற்ற இலவச 5ஜி சேவையை வழங்குகின்றன.
இலவச 5G தரவை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தும் வழி
ஏர்டெல்லின் இலவச 5ஜி டேட்டாவைப் பயன்படுத்த, பயனர்கள் குறைந்தபட்சம் ரூ.239 ரீசார்ஜ் செய்ய வேண்டும். மேலும், இது இன்வயிட் அடிப்படையிலான அமைப்பாகும். இதை Airtel Thanks App செயலியில் இருந்து அணுகலாம். ஏர்டெல்லைப் போலவே, ஜியோவின் இலவச 5G தரவை அனுபவிக்க பயனர்கள் குறைந்தபட்சம் ரூ.239 ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | Vivo-வின் 64MP கேமரா மற்றும் ஃபாஸ்ட் சார்ஜ் போன் ரூ.6,333-க்கு வாங்கலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ