பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% சுங்கவரி விதிக்கும் மத்திய அரசின் முடிவை ஆதரித்து மக்களவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி அன்று பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தற்கொலைப்படை பயங்கரவாதி இந்திய வீரர்களை குறிவைத்து நடத்திய தாக்குதலில் 35 பேர் பலியாகினர்.


இதைதொடர்ந்து, இந்தியாவுக்கு மிகவும் உகந்த நாடு என்று பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது. மேலும், பாகிஸ்தானில் உற்பத்தியான மற்றும் அங்கிருந்து இந்தியாவுக்கு அனுப்பும் பொருட்களின் மீது 200% சுங்கவரி விதிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீர்மானித்தது. முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆலோசனைப்படி, இதற்கான அறிவிக்கை கடந்த பிப்ரவரி 16-ஆம் நாள் வெளியிடப்பட்டது.


இந்நிலையில், இந்த முடிவுக்கு பாராளுமன்றத்தின் ஒப்புதலைக்கோரி மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்குர் பாராளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்த தீர்மானம் உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டது.


இந்த நடவடிக்கை ஆனது நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-நவம்பர் காலகட்டத்தில் 381 மில்லியன் டாலராக, இந்தியாவுக்கான பாகிஸ்தானின் ஏற்றுமதியைத் தாக்கும் என கருதப்படுகிறது. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் மிக முக்கியமான பொருட்களாக பழங்கள் மற்றும் கொட்டைகள், ஜிப்சம், கந்தகம், முடிக்கப்பட்ட தோல், தாதுக்கள், தாது எண்ணெய்கள் மற்றும் சிமென்ட் ஆகியவை உள்ளன.


புதிய கட்டண 200% இந்தியாவின் சராசரி உற்பத்தி விகிதமான 113.5% ஐ விடவும், பண்ணை அல்லாத பொருட்களுக்கு 34.6% ஆகவும் உள்ளது. MFN பயன்பாட்டு விகிதங்கள் முறையே 32.8% மற்றும் 10.7%, பண்ணை மற்றும் பண்ணை அல்லாத தயாரிப்புகளுக்கு பொருந்தும் எனவும் தெரிகிறது.