கொள்முதல் சுழற்சிகளை மேம்படுத்தாவிட்டால், வழக்கற்றுப்போன சாதனங்களுடன் செயல்படுவோம் என இந்திய ராணுவ ஜெனரல் பிபின் ராவத் கருத்து!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி : பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் மறைமுக தாக்குதல்களினால், இந்தியாவில் போரும் இல்லை, அமைதியும் இல்லை என்ற சூழலே இருந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார் இந்திய ராணுவ ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார். 


இந்தியாவின் தலைநகரமான டெல்லி பிரேதசத்தில் நடைபெற்ற டெஃப்காம் நிகழ்ச்சியில் இந்திய ராணுவ ஜெனரல் பிபின் ராவுத் கலந்து கொண்டு உரையாற்றினார். பாகிஸ்தான் பயங்கரவாதகளின் மறைமுக தாக்குதல்களினால் வெகுவாக இந்தியா பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், போரும் இல்லை, அமைதியும் இல்லை என்ற நிலையிலியே இந்தியா தற்போது உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


இனி வரும் காலங்களில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களிலிருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்ள வேண்டுமென்றால், இந்தியாவின் முத்தரப்பு பாதுகாப்பு துறைகளும் இணைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன் வைத்துள்ளார். ஓர் நாட்டின் பாதுகாப்பில் மிக முக்கியமாக கருதப்படுவது நாட்டின் ரகசியங்கள் காக்கப்படுவதுதான் என்று கூறிய பிபின் ராவத், அவற்றை இழந்து விட்டால் பின்னர் எத்தகைய திட்டங்கள் தீட்டினாலும் பயனற்று தான் போகும் என்றும் தெரிவித்துள்ளார்.


மேலும், "தொழில்நுட்பம் வேகமாக மாறிவருகிறது, நாங்கள் கொள்முதல் சுழற்சிகளை மேம்படுத்தவில்லை என்றால், நாங்கள் எப்போதும் வழக்கற்றுப்போன சாதனங்களுடன் செயல்படுவோம்." "செறிவான வட்டங்களில் கொள்முதல் நடைமுறைகளைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, நாம் ஒரே நேரத்தில் கொள்முதல் செயல்முறைகள் நிகழும் வகையில் சுழற்சி வடிவத்திற்கு செல்ல வேண்டும்" என்று இந்திய ராணுவத் தலைவர் கூறினார்.


மேலும் நாட்டின் இரகசியங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமெனில், பிற நாடில்லாத, நமது சொந்த தயாரிப்புகளை அதிகப்படுத்த வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்துள்ளார் இந்திய ராணுவ ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்தார்.