பாதுகாப்பு துறையில் ஏற்றுமதியாளராக உருவாகி வரும் இந்தியா: பிரதமர் மோடி புகழாரம்
தேசிய பாதுகாப்புக்கு தேவையான ஆயுதங்களை உள் நாட்டிலேயே உற்பத்தி செய்து கொள்ளும் நோக்கில் மத்திய அரசு பாதுகாப்பு தொழில் வழித்தடம் என்னும் டிபன்ஸ் காரிடர் திட்டத்தை தொடக்கி வைத்தது.
தேசிய பாதுகாப்புக்கு தேவையான ஆயுதங்களை உள் நாட்டிலேயே உற்பத்தி செய்து கொள்ளும் நோக்கில் மத்திய அரசு பாதுகாப்பு தொழில் வழித்தடம் என்னும் டிபன்ஸ் காரிடர் திட்டத்தை தொடக்கி வைத்தது.
2018ம் ஆண்டு ஜனவரி மாதம், ம்த்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் ‘டிஃபென்ஸ் காரிடர்' திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 10 நிறுவனங்கள் 3,123 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன. சென்னை, ஓசூர், சேலம், கோவை மற்றும் திருச்சியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகின்றன .
இந்நிலையில், அதே போன்று உத்திர பிரதேசத்தில், பாதுகாப்பு தொழில் துறை வழித்தடமான டிபன்ஸ் காரிடர் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அலிகரில் நடைபெற்ற கண்காட்சி மாதிரிகளைப் பார்வையிட்ட பிறகு பிரதமர் இதை கூறினார்.
"இந்தியா இனி பாதுகாப்பு துறை இறக்குமதியாளராக பார்க்கப்படப்போவதில்லை, பாதுகாப்பு துறையில் ஏற்றுமதியாளராக வெற்றிப் பாதையில் வேகமாக நகர்கிறது" என்று அலிகரில் பிரதமர் கூறினார்.
ALSO READ | PM on Subramania Bharati: பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தனி இருக்கை
இந்தியா இனிமேல் பாதுகாப்பு இறக்குமதியாளராக அடையாளம் காணப்படாமல், பாதுகாப்பு துறையில் ஏற்றுமதியாளராக முன்னேறி சென்று வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
"இன்று, நவீன பாதுகாப்பு உபகரணங்கள், கையெறி குண்டுகள், துப்பாக்கிகள் முதல் போர் விமானங்கள், ட்ரோன்கள், போர்க்கப்பல்கள் என அனைத்தும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன. பாதுகாப்பு துறையில் ஏற்றுமதியாளர்கள் என்ற புதிய அடையாளத்தை உருவாக்கும் பாதையில் இந்தியா நகர்கிறது, ”என்று பிரதமர் மோடி மேலும் கூறினார்.
இன்று, உத்தரபிரதேசம், நம் நாட்டில் உள்ள முதலீட்டாளர்களுக்கு மட்டுமல்லாமல், உலகின் ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய முதலீட்டாளர்களுக்கும் ஒரு கவர்ச்சிகரமான இடமாக மாறி வருகிறது. வளர்ச்சிக்கு சரியான சூழல் உருவாக்கப்படும் போது இது சாத்தியம்மகைறது. மாநிலத்தின் வளர்ச்சியை நோக்கி யோகி அரசு செயல்பட்டு வருகிறது, ”என்று பாராட்டிய பிரதமர் , 2017 க்கு முன்பு, உத்தரபிரதேசத்தின் ஆட்சி ‘குண்டர்கள்’ மற்றும் ‘மாஃபியாக்கள்’ கைகளில் இருந்த நிலையில், இப்போது குண்டர்களும் மாபியாக்களும், சிறை கம்பிகளுக்குப் பின்னால் உள்ளனர் என குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி முன்னதாக உத்தரபிரதேசத்தின் அலிகரில் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநில பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR