சிறந்த நிர்வாகமே மாற்றம் தரும் -மோடி
-
"மை கவ்(மை கவர்மென்ட்) நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள டவுன்ஹால் பகுதியில் பொது மக்கள் முன்னிலையில் உரையாற்றி வருகிறார். பிரதமர் மோடியிடம் பலர் கேள்வி கேட்டனர். பின்னர் அவர் பேசும் பொழுது:-
ஒரு குடிமகன் தனது வாக்குரிமையில் தவறும் பட்சத்தில் ஜனநாயகத்தில் பங்கேற்காமல் தவிர்ப்பதற்கு ஒப்பாகும். ஜனநாயகத்தில் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும். ஓட்டளிப்பதுடன் மட்டும் ஜனநாயக பொறுப்பு முடிவதில்லை.
அரசிலும் மக்கள் பங்கேற்க வேண்டும். நல்ல அரசாங்கம் என்பது வெளிப்படையானதும், நம்பிக்கை மிக்கதாகவும் இருக்க வேண்டும் . இந்த நாட்டின் முன்னேற்றம் மக்கள் அனைவரது கையில் உள்ளது. நிர்வாகம் என்பது சாதாரண விஷயமாக்கப்பட வேண்டும். அரசு வகுக்கும் கொள்கைகள் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
மேலும் உலகில் பொருளாதாரத்தில் வேகமுடன் வளர்ச்சி அடைந்து வரும் நாடு இந்தியா என கூறியுள்ளார்.