இந்திய ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத ஜாக்கெட் `தயார்`...!
இந்திய இராணுவ வீரர்களுக்கு ‘மேக் இன் இந்தியா’ முயற்சியின் கீழ் தயாரிக்கப்பட குண்டு துளைக்காத ஜாக்கெட்!!
இந்திய இராணுவ வீரர்களுக்கு ‘மேக் இன் இந்தியா’ முயற்சியின் கீழ் தயாரிக்கப்பட குண்டு துளைக்காத ஜாக்கெட்!!
இந்திய வீரர்களுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் கிடைக்கும். பிரதமர் நரேந்திர மோடியின் ‘மேக் இன் இந்தியா’ முயற்சியின் கீழ் தயாரிக்கப்படும் ஜாக்கெட்டுகளை மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் வியாழக்கிழமை அறிமுகபடுத்தினார்.
டிசம்பர் 2018 அன்று அறிவிக்கப்பட்ட பணியக இந்திய தரநிலை (BIS) நிர்ணயித்த தரங்களின் அடிப்படையில் இந்த ஜாக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. நிட்டி ஆயோக் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் (MHA) அறிவுறுத்தல்களைப் பின்பற்றி இந்த தரநிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய ஆயுதப்படைகள், துணை ராணுவப் படைகள் மற்றும் மாநில காவல்துறை ஆகியவற்றின் நீண்டகால நிலுவையில் உள்ள கோரிக்கையை இந்த தரநிலை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அவர்களின் கொள்முதல் செயல்முறையை சீராக்க அவர்களுக்கு உதவும்.
எல்லையில் பணியாற்றும் நமது பாதுகாப்பபடை வீரர்கள் எதிரி நாட்டு ராணுவத்தினர் மட்டும் பயங்கரவாதிகளின் திடீர் தாக்குதலால் வீரமரணம் அடைகின்றனர். இதனை தவிர்ப்பதற்கு மேக் இந்தியா திட்டத்தின்படி எல்லை பாதுகாப்புபடை வீரர்களுக்கு பிரத்யோகமாக ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 138 குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, குண்டு துளைக்காத பிரத்யோக ஜாக்கெட்டுகளை மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் செய்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். ராணுவ வட்டாரங்கள் கூறுகையில், நமது ஜவான்களின் உயிரிழப்பை தடுக்க தேவையான பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இந்த குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் மிகவும் கடின எஃகுகளால் உருவாக்கப்பட்டுள்ளது. எத்தகைய வலிமையான தோட்டாக்களையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.