காஷ்மீரிகளின் சுதந்திரப் போராட்டத்தை 'இஸ்லாமிய பயங்கரவாதம்' என்று இந்தியா முத்திரை குத்தியதாக இம்ரான்கான் குற்றசாட்டு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இஸ்லாமாபாத்: இந்தியா மீதான மற்றொரு தாக்குதலில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காஷ்மீரிகளின் சுதந்திரப் போராட்டம் இஸ்லாமிய பயங்கரவாதம் என்று முத்திரை குத்தப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் மக்களும் அவரது அரசாங்கமும் காஷ்மீர் மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பார்கள் என்றும் கான் மீண்டும் வலியுறுத்தினார்.


பாகிஸ்தான் தலைவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள கருத்தில்; காஷ்மீரிகளின் வேதனையை முழுமையாகப் புரிந்துகொள்கிறார் (ஜம்மு-காஷ்மீரில்), அவர் இரண்டு மாதங்களுக்கும் மேலாக 'ஒரு மனிதாபிமானமற்ற ஊரடங்கு உத்தரவின் கீழ்' தள்ளப்படுவதாகக் கூறினார். 


இம்ரான் கான் தனது டுவீட்டில், "கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இந்தியா ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள காஷ்மீர் மக்கள் அனுபவித்து வரும் வேதனையை நான் புரிந்து கொண்டுள்ளேன். ஆனால் காஷ்மீர் மக்களுக்கு உதவுவதற்கோ அல்லது ஆதரவு அளிப்பதற்கோ மனிதநேயத்துடன் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை கடந்து சென்றால் அதை இந்தியா அதற்கு ஒரு கதை சொல்லி, தனது கைகளில் எடுத்து விளையாடுகிறது.


இந்தியாவின் காட்டுமிராண்டிதனமான ஆக்கிரமிப்பை திசை திருப்பவே பூர்வீக காஷ்மீரிகளின் போராட்டத்தை பாக்.,ஆல் நடத்தப்படும் இஸ்லாமிய பயங்கரவாதம் என முத்திரை குத்த இந்தியா முயல்கிறது. இதை எல்லை தாண்டி வந்து தாக்குதவதற்கும் ஒரு காரணமாக சொல்ல இந்தியா பயன்படுத்துகிறது" என இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.