இந்தியா மற்றும் பாகிஸ்தான் சிறைகளில் அடைத்து வைக்கபட்டுள்ள 616 கைதிகளின் பட்டியலை இருநாட்டு தூதரகங்களும் பரிமாறிக் கொண்டன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில்  21-5-2008 அன்று செய்துகொண்ட தூதரக அணுகுமுறை ஒப்பந்தத்தின் படி, ஆண்டுதோறும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில்  இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் தங்கள் நாட்டு சிறைகளில் அடைத்து வைக்கபட்டுள்ள கைதிகள் மற்றும் மீனவர்களின் பட்டியலை பரிமாறிக்கொள்ள வேண்டும் .


அந்த வகையில் பாகிஸ்தான் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 261 இந்திய கைதிகளின் பட்டியலை  இந்திய தூதரகத்திடம் இன்று அளிக்கப்பட்டது. இவர்களில் 52 பேர் குற்றச்செயல்கள் மற்றும் எல்லை தாண்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் மீதி 209 பேர் மீனவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதேபோல் இந்திய சிறைகளில் உள்ள 355 பாகிஸ்தான் கைதிகளின் பட்டியலை புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திடம் இந்திய அரசு அளித்தது. இவர்களில் 256 பேர் குற்றச்செயல்கள் மற்றும் எல்லை தாண்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள்  99 பேர் மீனவர்கள் ஆவர். 


புதுடெல்லி மற்றும் இஸ்லாமாபாத்தில் ஒரே நேரத்தில் கைதிகளின் பட்டியல்கள் இராஜதந்திர சேனல்கள் மூலம் பரிமாறிக்கொள்ளப்பட்டதாக வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


அதேவேளையில் காணாமல் போன இந்திய பாதுகாப்பு வீரர்கள் மற்றும் மீனவர்கள் தங்கள் படகுகளுடன், கைதிகளை முன்கூட்டியே விடுவிக்கவும், திருப்பி அனுப்பவும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. மேலும் 22 இந்திய மீன்பிடி படகுகளை விடுவித்தல் மற்றும் திருப்பி அனுப்புவது தொடர்பாக கராச்சிக்கு 4 பேர் கொண்ட குழுவினரின் ஆரம்ப பயணத்தை ஏற்பாடு செய்யுமாறும் பாக்கிஸ்தானை இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.


"மீதமுள்ள கைதிகள் மற்றும் மீனவர்களுக்கு உடனடியாக விடுவிப்பதற்கும் திருப்பி அனுப்பப்படுவதற்கும் வசதியளிப்பதற்கான கோரிக்கையுடன் உடனடி தூதரக அணுகல் கோரப்பட்டுள்ளது," என்றும் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.