எதிர்காலத்தில் சூழ்நிலையை பொறுத்து அணு ஆயுத கொள்கை மாறலாம்!
எதிர்காலத்தில் சூழ்நிலையை பொறுத்து அணு ஆயுத பயன்பாட்டு கொள்ளை மாற்றப்படலாம் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்!
எதிர்காலத்தில் சூழ்நிலையை பொறுத்து அணு ஆயுத பயன்பாட்டு கொள்ளை மாற்றப்படலாம் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்!
அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்துவது இல்லை என்பது இந்தியாவின் கொள்கை. ஆனால், எதிர்காலத்தில் சூழ்நிலையை பொறுத்து இது மாறலாம் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ராஜ்நாத் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்துள்ளார். அணு ஆயுத சோதனை நடத்தப்பட்ட ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில், ராஜ்நாத் சிங் தொடர்ந்து பேசுகையில்., இந்தியாவை அணுசக்தி நாடாக மாற்றுவது என்பது நமது தீர்க்கமான முடிவு. அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்துவது இல்லை என்பதில் இந்தியா உறுதிபூண்டுள்ளது. இதில், தற்போதும் உறுதியாக இருக்கிறோம். ஆனால், எதிர்காலத்தில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அணு ஆயுத கொள்கை மாறலாம் எனவும் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த 2010-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மறைந்த பாதுகாப்பு மந்திரி மனோகர் பாரிக்கர், இந்தியாவின் அணு ஆயுத கொள்கையான "முதல் பயன்பாட்டுக் கொள்கையை பின்பற்றுவதில்லை" என்று தெரிவித்தார். எவ்வாறாயினும், இந்த அறிக்கை தனது தனிப்பட்ட பார்வை என்றும், அரசாங்கக் கொள்கையில் மாற்றத்தை பிரதிபலிக்கவில்லை என்றும் அவர் பின்னர் தெளிவுபடுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.